Author: சு.வேணுகோபால்

ஆறுதல்

களைவெட்டி மூன்று நாள் வாடப் போட்டிருந்த வெண்டைச் செடிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோபால்சாமி, “ஈரத்தில் வெளையாடாத கபிலா, சேத்துப்புண் வரும் தடத்துக்குப் போ, எத்தனவாட்டி சொல்றது” என்றார். நீர்வற்றி சொதசொதவென்று இருந்த வாமடை மண்ணைப் பிசைந்து குதிரை செய்துகொண்டிருந்த கபிலன், “நீயும்தானே சேத்தில நிக்கிற தாத்தா. உனக்கு வரலையன்னா எனக்கு எப்படி வரும்?” என்றான்.…

அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை

1. மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்…

விலகிச் செல்லும் பாதை

கோயிலுக்கு வந்த கந்தசாமி பெரிய தகரக்கூண்டால் மூடப்பட்டிருக்கும் தேர் அருகில் நின்றார்.  மதிய உணவு உண்ண மனசில்லாமல் வந்துவிட்டார். வந்த பின் கோயிலுக்குள் செல்ல மனம் வரவில்லை. மூன்றுமுறை வந்துவேண்டியும் ஜோதியின் வாயசைவில் ‘சரி’ என்று ஒரு வார்த்தையை வரவழைக்க முடியவில்லை. கோயிலுக்குள் போனாலும் அவளைத் திருத்தமுடியும் என்று தோன்றவில்லை. பழனிச்சாமி ஐயாவைப் பார்த்தும் ஐந்து…

தமிழ்ச் சிற்றிதழ் மரபின் காவிய நாயகன் சி.சு.செல்லப்பா

செல்லப்பாவிற்கு ஒரு கனவு இருந்தது. வேதநாயகம் பிள்ளை, ராஜமய்யர், மாதவையா காலத்தில் ஏற்பட்ட ஒரு படைப்புத் திருப்பம்; பாரதி, வ.வே.சு.ஐயர், உ.வே.சா. உண்டாக்கிய எழுச்சிக்காலகட்டம்; வ.ரா.கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி ந.பிச்சமூர்த்தி முதலானோர் உருவாக்கிய புரட்சிகாலகட்டம் போல ஏன் மற்றொரு இலக்கிய காலகட்டம் கடந்த 20 ஆண்டுகளாக எழவில்லை? அதைப்போன்ற காலகட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற…

சாளரங்களைத் திறந்து வைக்கும் கலைஞன்

நவீனின் முதல் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’ கதைகளைப் படித்ததும் அவரின் முதன் முதல் எழுதப்பட்ட இரண்டு மூன்று கதைகள் எவை என்றுதான் பார்த்தேன். இலக்கியம் குறித்த பெரிய புரிதல் இல்லாமல், வாசிப்பும் இல்லாமல், ஆசையின் பாற்பட்டோ, சொல்லவேண்டும் என்ற உந்திப்பினாலோ அல்லது எழுத்தின் மீதான ஆர்வத்தாலோ எழுதப்பட்ட கதைகள் எனக்கு முக்கியமானவை. அதிலே சுயம்புவான…

சு.வேணுகோபால் சிறுகதை: சொல்ல முடிந்தது

விடிகாலை, சிப்ட் முடித்துவிட்டு மில்லிலிருந்து ரகுராம் சைக்கிளில் வந்தான். மாணிக்கம் ஆசிரியர் திண்ணையில் இருந்த துரையும் சின்னச்சாமியும் வேகமாக எழுந்து நடந்தார்கள். கேசவன் டீக்கடை முன் தேங்காய் உரிக்கும் வாச்சியோடு நின்றிருந்த செல்வமும் பரமேஸ்வரனும் வேகமாகப் போனார்கள். டீக்கடை எதிரில் உள்ள புங்கமரத்தின் அடியில் போட்டிருந்த பட்டியக்கல்லில் சைக்கிளில் இருந்தபடியே காலூன்றி நின்றான். வடக்கால் இருந்துவந்த…

சு.வேணுகோபால் பதில்கள்

மதிப்பிற்குறிய ஐயா. நான் கடந்த முறை கேள்வி கேட்டிருந்த ஆதவன். புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா இல்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேலும் ஒரு கேள்வி. தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் எடிட்டிங் இன்றியும் எழுத ஏன் அகப்பக்கம் ஒன்று வைத்திருக்ககூடாது ? ஆதவன், தமிழகம்   அன்புமிக்க ஆதவனுக்கு, என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் எடிட்டிங் இல்லாமலும்…

சு.வேணுகோபால் பதில்கள் – பகுதி 2

கேள்வி 1: நீங்கள் எழுத்தாளராக யார் மூலம் அல்லது எதன் மூலம் வந்தீர்கள் சர்? சரியாகக் கேட்பதென்றால் எந்தப்பள்ளி? ஜெயமோகன் சு.ரா பள்ளியிலிருந்து வந்தது போல. கேள்வி 2 : விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எதிர்க்கொள்கிறீர்கள்? விமர்சனம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா? பாலன், மலேசியா அன்புடன் பாலனுக்கு இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதென்றால்…

சு. வேணுகோபால் பதில்கள்

ஐயா, நான் உங்கள் சிறுகதைகளை வாசித்துள்ளேன். பெரும்பாலான கதைகள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் நவீன இலக்கியத்தில் பலர் கதைகளை வாசித்து விளங்கிக்கொண்டுள்ளேன். தாங்கள் எவ்வகையில் மற்ற எழுத்தாளர்களுடன் மாறுபடுகிறீர்கள்? மித்ரன், சென்னை அன்புடன் மித்திரனுக்கு, உங்கள் கேள்வியில் இரண்டு விசயங்களை முன் வைத்துள்ளீர்கள். பிறர் எழுதுகிற நவீன கதைகள் புரிந்து கொள்ளும் படியாக இருக்கின்றன. என்…

மாறுதல்

அருவி குளிர்ச்சியை அள்ளிக் கொட்டியபடி ஓடுகிறது. தார்ச்சாலையில் நின்று பார்க்காமல் உள்ளே வந்து நின்றால், வெண்மஞ்சள் பாறையில் அருவி குதித்து வரும் நிர்மால்யம் ஈர்க்கிறது. தார்ச்சாலையில் நின்றபோது, இவ்வளவு அழகான அருவியை முழுசாகப் பார்க்கவிடாமல் மரங்கள் மறைத்தன. அருவியின் காலடி மரங்களின் கீழே நீரடித்து வந்த சருகுகள் மெத்தையைப்போலக் கிடக்கின்றன. மூன்று மாதங்களாக மழையே இல்லை.…