Author: சல்மா தினேஸ்வரி

வளையங்களைத் தாண்டும் சுயநலம்

தான் கடந்து வந்தவர்கள் யாவரும் சுயநலமிக்கவர்களே, தானும் அப்படி இருப்பதில் தவறில்லை என்று சொந்த தராசில் சண்முகம்பிள்ளை எனும் கதாபாத்திரம் தன்னை நிறுத்தி நியாயப்படுத்தும் வகையில் இந்நாவல் முடிகிறது, அவர் பார்வையில் எல்லாருமே அக்கினி வளையத்தில் சாகசம் செய்யும் சுயநலமிக்க புலிகளாக நினைத்துக்கொள்கிறார். தானும் புலிதான் என அவர் எண்ணிக்கொள்ளும் நிலையில் ஒரு வாசகனாக அவ்வரியைக்…

பிறப்பற்ற பிறப்பு

சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தூங்கம் தூக்கு கயிறுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன வயிற்றை நிறைத்துக் கொண்டது போல் மனத்தை  நிறைத்துக் கொள்ள வழியில்லை அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன இப்போதுதான் துடிக்கிறது என்னுள் இன்னொரு இருதயம் . கண்ணீரை நிரப்பிக் கொண்டு சிரித்து மழுப்புகிறேன் சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே சாகிறேன் அசைவுகளில் நான் அசைவற்று…

“தமிழ் எழுத்தாளர் சங்கம் தக்க விழிப்புணர்வை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தவில்லை”- உதயசங்கர் எஸ்பி

utaya 03உதயசங்கர் எஸ்பி (Uthaya Sankar SB)- மலேசிய தேசிய இலக்கிய வெளியிலும் தமிழ் இலக்கிய வெளியிலும் புகழ்பெற்ற பெயர். ‘அவ்லோங்’ தைப்பிங்கில் (Aulong,Taiping) பிறந்து வளர்ந்த இவர், தேசிய மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைக்கும் இவர் ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார்.

ஆரம்பக் கல்வியை S.R.K Convent Aulongகிலும் இடைநிலைக் கல்வியை S.M.K Darul Ridwanனிலும் முடித்த இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலாய் இலக்கியத் துறையில் பட்டம் பெற்றவர். ஆரம்பப் பள்ளியிலேயே கதைகளை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களின் பக்கங்களை இவரின் எழுத்துக்கள் அலங்கரித்துள்ளது.

ஏ.சாமாட் சைட் வாழ்க்கை குறிப்பு

ஏ.சாமாட் சைட் (இயற்பெயர்: அப்துல் சாமாட் முகமது சைட்) மலாய் இலக்கிய உலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். இதுவரை முப்பதுக்கும் மேல்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நாவல், கவிதை, சிறுகதை, இலக்கிய கட்டுரை என்று பல்வேறு தளங்களில் இயங்கக்கூடிய இலக்கிய ஆளுமை.   1985 –ல் தேசிய இலக்கியவாதி அங்கீகாரம் பெற்றது உட்பட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மலாக்கா…

விண்மீன்களற்ற இரவு

மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை (மூலம் : ஏ. சமாட் சைட்  |  தமிழில் : சல்மா தினேசுவரி) அன்றைய இரவு, வானத்தில் விண்மீன்களே இல்லை. கரு மேகங்கள் சூழ்ந்திருந்தன. தொட்டு வருடியும் மூர்க்கமாகவும் மோதிச் சென்ற காற்று நிச்சயம் கனத்த மழை பெய்யும் என்பதை அடையாளப்படுத்தியது. பகலின் வெயில் சுளீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. தகிக்கும் வெயிலால்…

தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறையும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் அக்கறையின்மையும்!

டேவான் பகாசா டான் புஸ்தகா (DBP) தேசிய மொழி காப்பகத்தின் கீழ் Jabatan Pengembangan Bahasa Dan Sastera எனும் தேசியமொழி மற்றும் தேசிய இலக்கிய விரிவாக்கத்துறை 2009-ஆம் ஆண்டு நிருவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் முதன்மையான நோக்கங்களிள் ஒன்று மலேசிய நாட்டின் பல்லின மக்களிடையே தேசிய மொழியையும் தேசிய இலக்கியத்தையும் வளப்படுத்துவதோடு விரிவாக்கம் செய்வதாகும்.…

குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை… (பகுதி 2)

சென்ற மாதத்தின் தொடர்ச்சி… 1930-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரை இக்காலக்கட்டத்தில் நிறைய சிறுகதைகள் மேல்நாட்டுத் தாக்கத்தைக் கண்டித்து வந்தது எனலாம், வெள்ளையர்களால் பகடைக்காயாக உருவாக்கப்பட்டவர்களின் கதைகள், அடிமைகளாக வாழும் மலாய்க்காரர்களின் நிலை. மேல்நாட்டுப் பழக வழக்கங்களைப் பின்பற்றும் மலாய்க்காரர்களின் அவலநிலைப் முதலியன கருப்பொருளாக அச்சிறுகதைகள் கொண்டுள்ளன. 1930-ஆம் ஆண்டுகளின் சிறுகதை வளர்ச்சியில் ‘ராம்நாத்’…

குவர்னிகா: அ.பாண்டியனின் மலாய் இலக்கியம் கட்டுரையை முன்னிட்டு ஒரு பார்வை…

மலேசியாவில் மலாய் சிறுகதை இலக்கியத்திற்குச் செல்வதற்கு முன்பு ஆரம்பக்கால மலாய் இலக்கிய போக்கினைக் கண்ணுறுவது முக்கியமாகும். மலேசியாவின் சுதந்திரத்திற்கும் ஒரு வகையில் மலேசிய மலாய் இலக்கியம் பங்கையாற்றியிருக்கிறது எனில் மிகையில்லை. மலேசியாவில் தேசிய இலக்கியம் என்பதும் மலாய் இலக்கியம் என்பதும் ஒன்றுதான் என்ற நிலை இருந்துதான் வருகிறது. சீனமொழியும், தமிழ்மொழியும் மலேசியாவில் வழக்கத்தில் உள்ள மொழியாக…