
காலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி…