(1)
“தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.”
இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் இந்தக் குரல்தான் அவரது படைப்பு மனதின் மையமும் என அறிவேன்.