Category: பதிவு

வல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட கலை இலக்கிய விழா 2018 ஆம் ஆண்டில் நிறைவு விழாவாக அமையும் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். பத்தாவது கலை இலக்கிய விழாவுக்கான திட்டம் கடந்தாண்டே வரையறுக்கப்பட்டது. அன்றைய நாளிலிருந்து கலை இலக்கிய விழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் 20,000 வெள்ளி செலவை உள்ளடக்கிய கலை இலக்கிய விழா ஆண்டாண்டாக…

சென்னையில் மலேசிய நவீன இலக்கியம்

16.9.2018இல் சென்னையில் அமைந்துள்ள இக்சா மையத்தில் வல்லினம் மற்றும் யாவரும் பதிப்பகம் இணைந்து மூன்று நூல்களின் அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ (மலேசிய – சிங்கை ஆளுமைகளின் நேர்காணல்கள்), போயாக் (ம.நவீன் சிறுகதை தொகுப்பு), ஊதா நிற தேவதைகள் (இரா.சரவணதீர்த்தாவின் சினிமா கட்டுரைகள்) ஆகிய மூன்று நூல்களின் விரிவான அறிமுகம் செய்யப்பட்டது.…

சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்

வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன்  தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப்  பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும்  வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது.…