மழை நீரானது புவி மீதினில் சேற்றின் மீது பொழிவதைக் கண்டு மழை நீர் என்பது சேற்றினால் ஆனது என எண்ணம் கொள்வது அவரவர் அறியாமையினை உணர்த்திடும். சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மீதான எனது எண்ண ஓட்டங்களும் அதன் மீதான பார்வையும் அவ்வாறே இருந்தன எனலாம். வல்லினம் ஏற்பாட்டில் நான் கலந்து கொண்ட சுனில் கிருஸ்ணன் அவர்களுடனான…
Author: நிர்மலா முரசி
நாவல் என்பது… முகாம் அனுபவம்
வல்லினம் நடத்தியுள்ள இரு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கலந்து கொண்டுள்ளேன். அவை யாவும் ஒருநாள் நிகழ்வாகும். அவற்றில் ஏற்படாத எதிர்பார்ப்பினை இம்முறை கூலிம் கெடாவில் நடந்த மூன்று நாள் நவீன இலக்கிய முகாமானது என்னுள் ஏற்படுத்தியிருந்தது. வல்லினம் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் இலக்கியம் பற்றிய தெளிவற்ற பார்வையைக் கொண்ட எனக்கு, இலக்கியம் பற்றிய புரிதலையும் தெளிவையும் கொடுத்து…
வல்லினம் பரிசுக் கதைகள்: என் பார்வையில்
திரைப்படங்கள், சீரியல்கள், ஜனரஞ்சக நாவல்கள் என முன்பு ஆர்வம் கொண்டிருந்தாலும் அவ்வார்வமென்பது தற்பொழுது மாறி நல்ல இலக்கியங்களை வாசிப்பதன் மீதிலான ஈடுபாட்டினை மிகைப்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுகதைகள். சிறுகதையினை வாசித்து முடிக்கையில் எண்ணக்கிடங்கில் கணக்கற்ற எண்ண அலைகளினை என்னுள் உண்டாக்கி மீள்வாசிப்பிற்குள் என்னை மூழ்கடித்து மிதக்க வைப்பதால் கூட இருக்கலாம். வல்லினம் நடத்திய போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி…
மனிதனும் மிருகமுமான கடவுள்
தேர்ந்தெடுத்த நூல்களினை வாசிக்கும் பழக்கமுள்ளோருக்கு மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பினை உள்வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும். அதற்கு அவரின் எளிய உரைநடை சொல்லாடலே காரணமாகும். மா.சண்முகசிவா சிறுகதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தொகுப்பில் தற்கால சமூகப் பிரச்சனைகளின் ஊடே வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கிய விளிம்புநிலை மக்களின் அவலநிலையினை மையமாகக் கொண்டுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். கதையில் வரும் மையக் கதாபாத்திரங்கள்…
சமகால சிறுகதைகளின் செல்நெறிகள் : ஓர் அனுபவம்
கடந்த தடவை வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது, அவ்வறையின் ஒரு பகுதியில் விற்பனைக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் சிலவற்றை வாங்கியும் கொண்டேன். வாங்கிய புத்தகங்களில் நான் விரும்பி வாசித்து என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தியபுத்தகமாக குறிப்பிட விரும்புவது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பாகிய ‘அம்பு படுக்கை’ எனும்…
வல்லினத்தின் நாவல் இலக்கிய நிகழ்ச்சி அனுபவம்
வல்லினத்தை முகநூல் வாயிலாகவே அறிவேன். அதன் இணைய இதழ்களை தவறாது வாசிப்பதுடன் வல்லினத்தின் தரம் வாய்ந்த இலக்கிய செயல்பாடுகளினாலும் நேர்மையான விமர்சன தன்மையினாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டவள் நான். வல்லினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவிற்கு பலமுறை அழைப்பு வந்தும் அலுவல் காரணமாக செல்ல இயலவில்லை. ஆனால் இம்முறை வல்லினத்தின் “நாவல் இலக்கியம் & யாழ்…