Author: கங்காதுரை

அபிராமி கணேசனின் கட்டுரைகளும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதும்

வல்லினம் ஆசிரியர் ம.நவீன் என்னை சில மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார். இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது என்ற பெயரில் புதிய விருது  வழங்கும் திட்டத்தைப் பற்றி பேசினார்.   ஏற்கனவே வல்லினம் விருது என்ற பெயரில் தகுதியான மூத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அ.ரெங்கசாமி, சை.பீர்முகம்மது போன்ற இலக்கிய ஆளுமைகள் வல்லினம் விருதைப் பெற்றுள்ளனர். ஆனால்…

ரிங்கிட் நாவல் விமர்சனம்: நிகழ்த்திக் காட்டும் வரலாறு

வரலாற்றுநாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிக் கூறுகிறார். ”வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது”. இப்படியான ஒரு முயற்சியிலிருந்து சற்று விலகிப் போயிருக்கிறது ஆசிரியர் அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ நாவல். வல்லினம் நடத்திய குறுநாவல்…

காலத்தால் நிரப்பப்பட்ட இடைவெளி

‘அவரவர் வெளி’ எனும் நூல், அ.பாண்டியன் அவர்களது மூன்றாவது நூல். வல்லினம் பதிப்பகமும் யாவரும் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்த நூல். வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழாவில் வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பிலக்கியங்கள் குறித்த விமர்சன நூல்கள் வெளிவருவது மிகவும் குறைவு. அதன் விளைவு, எழுதப்படுவது எல்லாமே இலக்கியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு…

விலங்குகள் சொல்லும் கதைகள்

‘Folklore’ எனும் சொல் 1864 ஆம் ஆண்டு ஜான் வில்லியம் தாமஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தமிழில் நாட்டுப்புறவியல் என்பது இதன் சொல்லாட்சியாக இருக்கிறது.நாட்டுப்புறவியலில் பல வகைமைகள் இருந்தாலும் அதில் நமக்கு மிகவும் பரீட்சயமானது நாட்டுப்புறக் கதைகளாகும். நாட்டுப்புறக் கதைகள்(Folktales) அநாமதேயமாக உருவாக்கப்பட்டவை.அவை வாய்மொழியாக தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் மக்களால் பாதுகாக்கப்படுகின்றன.அவை ஒரு சமூகத்தின்…

பெத்தவன்: நிகழ்த்தப்படும் ஆவணம்

‘பெத்தவன்’ நெடுங்கதை வெறும் நாற்பது பக்கங்கள் மட்டுமே. அந்த நாற்பது பக்கங்களை வாசித்து முடித்தபோது சில மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறிப் போயிருந்தேன். மனித குலத்தில் வேரூன்றியிருக்கும் சாதியத்தையும் அதன் குரூரங்களையும் கதை முழுக்க நிரம்பியிருக்க அதை வாசிக்கும் வாசகன் நிச்சயம் பதைபதைப்புக்கு உள்ளாவான். எழுத்தாளர் இமையம் அவர்களை வல்லினம் மூலமாக…

தேவதைகளின் குசு

எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க…

வல்லினம் கலை இலக்கிய விழா 10 – ஒரு கண்ணோட்டம்

2009 ஆண்டில் தொடங்கப்பட்ட கலை இலக்கிய விழா 2018 ஆம் ஆண்டில் நிறைவு விழாவாக அமையும் என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான். பத்தாவது கலை இலக்கிய விழாவுக்கான திட்டம் கடந்தாண்டே வரையறுக்கப்பட்டது. அன்றைய நாளிலிருந்து கலை இலக்கிய விழாவுக்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் 20,000 வெள்ளி செலவை உள்ளடக்கிய கலை இலக்கிய விழா ஆண்டாண்டாக…

கொழும்பில் வல்லினம் 100

கொழும்புக்கு வந்து சேர இரவு மணி 11 ஆகியிருந்தது. யாழ்ப்பணத்திலிருந்து தொடங்கிய பயணம் என்பதால் உடல் கடும் சோர்வடைந்திருந்தது. அன்றிரவு தங்குவதற்கான இடம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை 11மணிக்கு ‘வல்லினம் 100’ அறிமுக நிகழ்ச்சி இருப்பதாக நவீன் ஏற்கனவே சொல்லியிருந்தார். பயணத்தின் போது கண்டி பேராதனை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய…

மண் விழுந்தது

நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் பொறியியல் மற்றும் பசுமை தொழில்நுட்பப் புலத்தின் அறை எண் E214-இல் வகுப்பு நடத்த இடமளிக்கப்பட்டிருந்தது. இம்முறை அங்கு சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய வரலாற்றையும் அரசியலையும் போதிக்கும் பாடம். அன்று அதுதான் முதல் வகுப்பு. வகுப்பில் பாடம் போதித்துக் கொண்டிருக்கும்போது மெசெஞ்சரில் தகவலொன்று வந்தது. அதையடுத்து எனக்குப் பாடம் நடத்த மனம்…

தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

மலேசியாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என்பது மலேசிய சீனக் கல்வி இயக்கமாகும். இன்றும் இந்நாட்டில் நாம் தொடர்ந்து தாய்மொழிக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிலைநிறுத்திய அமைப்பு இதுவாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி மலேசியக் கல்வி வரலாற்றிலும் மிக முக்கியமானதோர் இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் இயக்கம்…

டாக்டர் மா.சண்முகசிவா சிறுகதைகள் : நவீன அழகியலின் முகம்

இலக்கிய விமர்சனம் என்பது மலேசியாவில் மிகச் சிக்கலான ஒரு விடயம். விமர்சனத்தை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் போதுமான பக்குவம் மலேசிய இலக்கியச் சூழலில் இல்லை. ஓர் எழுத்தாளனோ அல்லது வாசகனோ ஒரு படைப்பை வாசித்துவிட்டு அதை விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதுதான் இங்கே நிலவும் சூழல். ஓர் இலக்கியப் படைப்பு மீது வைக்கப்படும்…

தொழில்

வகுப்பறையில் மாணவர்கள் எனக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஓர் உடன்பாடு ஒப்பந்தமாகியிருந்தது. மாணவர்களாகட்டும் நானாகட்டும் பத்து நிமிடத்திற்குள் வகுப்பில் இருக்க வேண்டும். அடுத்த பதினோறாவது நிமிடத்தில் பாடம் ஆரம்பமாகும். ஐந்தாவது நிமிடத்தில் வகுப்பில் நுழைந்தேன். அவர்கள் முகத்தில் சின்னதாய் ஏமாற்றத்திற்கான ஓர் அறிகுறி. பாடம் தொடங்கியது. சீன மாணவர்களுக்குத் தமிழ்மொழி வேற்றுமொழிப் பாடம். எட்டு…

மலேசிய சீன இலக்கியம் : ஒரு சிறுகதைத் தொகுப்பினூடாக அறிமுகம்

மலேசியாவில் பல்வேறு மொழிகளிலும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இவற்றுள் மலாய் இலக்கியம் தேசிய இலக்கியமாக விளங்குகிறது. இதர மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் படைப்பாகவே பார்க்கப்படுகின்றன. இன்று வரையிலும் தமிழ் மற்றும் சீன எழுத்தாளர்கள் தங்களது படைப்பிலக்கியங்களைத் தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோருகின்றனர். அறிவித்தபாடில்லை. இந்நிலையில் சீன இலக்கியத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் ‘மலேசிய…

விலங்குகள்

மீண்டும் நிர்வாகத்திடமிருந்து அதே மின்னஞ்சல் வந்திருந்தது. இம்முறை, பல்கலைக்கழக வளாகத்தில் திரியும் விலங்குகளுக்குத் தீனி போடக்கூடாது என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் அமைந்திருந்த பெரிய நிலப்பரப்பில் விலங்குகள் திரிவது நிர்வாகத்திற்கு நெருடலாக இருந்தது. அவை ஆதியிலிருந்து அங்குதான் திரிந்து கொண்டிருந்தன. இப்போதும் அங்குதான் திரிந்து கொண்டிருக்கின்றன. பதினான்கு வருடங்கள் முன்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அது…

அடையாளம்

விரிவுரையாளனுக்கான அடையாளத்தைச் சிவப்பு நிறக் கயிற்றில் தொங்கும் பெயரட்டையில் பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்திருந்து. கழுத்தில் பெயரட்டை தொங்கும்வரை வளாகத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வளாகத்தை விட்டு வெளியேறினால் அடுத்து நான் சந்திக்கும் பலர் என்னிடம், “தம்பி, நீ என்னப்பா படிக்கிற?” என்ற கேள்வியைத்தான் கேட்பார்கள். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையுடன் பார்ப்பார்கள். வெளிச்சூழலில் அது…