வல்லினம் குறுநாவல் பட்டறை

இவ்வருடம் விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமிக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.

அவர் கீழ்க்கண்டவாறு தன் அகப்பக்கத்தில் கூறியுள்ளார்:

பேனர்இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை சற்று முன்னரே அறிவிக்கவேண்டிய சூழல் அமைந்தது. ஈராண்டுகளுக்கு முன்னரே மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிப்பது என முடிவுசெய்திருந்தோம். இவ்வருடம் மலேசியாவில் கூலிம் நகரில் சுவாமி பிரம்மானந்தா அவர்களின் குருகுலத்தில் நிகழ்ந்த இலக்கியக் கருத்தரங்குக்கு சீ.முத்துசாமி வந்திருந்தார். கருத்தரங்கின் முடிவில் மலேசிய இலக்கியத்தின் தேக்கநிலை, சாத்தியங்கள் குறித்த கொஞ்சம் கறாரான விவாதம் நிகழ்ந்தது. நான் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக சீ.முத்துசாமியை காண்கிறேன். கூடவே அவரது ஆக்கங்கள் பற்றிய, பங்களிப்பின் போதாமை பற்றிய குற்றச்சாட்டுகளும் எனக்கு உண்டு. அதை ப்பற்றிய விவாதத்தில் இவ்வருடம் சீ. முத்துசாமி அவர்களுக்கு விருதளிப்பது என முடிவ் செய்திருப்பதை அறிவித்தோம்.

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா மலேசிய நவீன இலக்கியத்தை மையப்படுத்துவதாக அமையும். விழாவை ஒட்டி சீ.முத்துசாமியின் நாவல் ஒன்று வெளியிடப்படும். அவரைக்குறித்து ஒரு விமர்சனநூல். கூடவே மலேசிய மூத்த படைப்பாளிகளான கோ.புண்ணியவான், சண்முகசிவா ஆகியோரின் தெரிவுசெய்த படைப்புக்களின் தொகுதிகள் வெளியாகும். சீ.முத்துசாமி, கோ. புண்ணியவான், சண்முகசிவா, சை.பீர்முகம்மது, ம.நவீன், சு.யுவராஜன், பாலமுருகன் போன்ற மலேசிய படைப்பாளிகள் வாசகர்களைச்சந்திக்கும் நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படும். மலேசியாவின் நவீன இலக்கியத்தின்மீது தமிழிலக்கியம் இதுகாறும் போதிய கவனம் செலுத்தியதில்லை. அந்தக்கவனம் இம்முறை உருவாக இவ்விருது ஒரு காரணமாக அமையவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

இலங்கை மலையக இலக்கியத்தில் தெளிவத்தை ஜோசப் போல மலேசிய இலக்கியத்தில் சீ முத்துசாமி ஒரு முன்னோடி. குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் மலேசிய அழகியல் ஒன்றின் கண்டடைதல்கள் கொண்டவை. ஆனால் முன்னோடிகளுக்குரிய குன்றாத ஊக்கத்துடன் அவர் தொடர்ந்து செயல்படவில்லை. பெரும்பாலும் பொது அரசியல்கருத்துக்களை ஒட்டிய எளிய எழுத்துக்கள் கொண்ட மலேசிய இலக்கியச்சூழலில் சீ.முத்துசாமியின் கலைப்பண்பு தனியாக அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை. அது அவரது சோர்வுக்கான காரணம். சொல்லப்போனால் அடுத்த தலைமுறை உருவாகி வந்து ம.நவீன், சு.யுவராஜன், பாலமுருகன் போன்றவர்களால் அவர் அடையாளம்காணப்பட்ட பின்னரே அங்கே கலைநோக்கு கொண்ட இலக்கியம் தொடங்கியது என நினைக்கிறேன்.

சீ.முத்துசாமிக்கு விருது அளிப்பதென்பது மலேசிய இலக்கியச் சூழலில் தமிழ் நவீன இலக்கியப்பரப்பு எவரை அடையாளம் கண்டு முன்னிறுத்துகிறது, எந்தவகை எழுத்து மெலேழுந்து தொடர விழைகிறது என்பதற்கான அறிவிப்பும்கூட.

சீ.முத்துசாமியின் நூல்களை வரும் கோவை புத்தகக் கண்காட்சியிலும் தொடர்ந்தும் கிடைக்கச்செய்வோம். அவரை வாசித்த ஓர் இளைஞர் வட்டம் டிசம்பரில் விழாவுக்கு வரவேண்டும். ஆகவேதான் முன்னரே அறிவிக்கிறோம். மலேசியா- தமிழ் நவீன இலக்கியங்களுக்குள் கு.அழகிரிசாமிக்குப்பின் விட்டுப்போன ஒரு தொடர்பு மீண்டும் வலுவாக உருவாகவேண்டும்.

3 comments for “வல்லினம் குறுநாவல் பட்டறை

 1. nanthini
  April 24, 2017 at 3:31 pm

  வாழ்த்துக்கள்

 2. Nanthini
  April 24, 2017 at 5:22 pm

  றிய மின் விளக்கு அதிக வெளிச்சம் .

  சாம்பல் பூத்தத் தெருக்கள் எருவாகி நந்தவனத் தெருவாகியது உங்கள் அனுபவங்கள் எனும் வாடா மலரால் .தெள்ளதெளிவான காட்சிகள் உங்கள் எழுத்துவடிவத் தொலைக்காட்சியில் நேரிடையாகக் காணமுடிந்தது . ஃபாங்க் குடித்தும் நீங்கள் நிதானத்தை இழக்கவில்லை காரணம் கட்டுப்பாடு என்னும் நிவாரணி நீங்கள் குருதியில் கலந்திருப்பதால் ,நீங்களும் காவியுடை அணிந்து புகைப்படம் எடுத்தது எனக்கு புதுமையாக வியப்பாக இருந்தது . ம்ம்ம்போனால போகட்டும் 50 ரூபாய் கொடுத்து , அந்தக் கிழவரிடம் ஃபாங்க் வாங்கியது , உண்மையான விலை 25 ஆக இருக்கலாம் , ஒரு வேளை அவ்வயோதிகர் அப் பணத்தை உறவினர்களுக்கு அல்லது தன் சீடருக்கு ஒரு கைப்பிடி உணவிற்குச் செலவழித்திருக்கலாம் …… மொத்தத்தில் உங்கள் படைப்பு ஒரு மின் விளக்கில் அதிக வெளிச்சத்தோடு ஒட்டுமொத்த நகத்தைக் காணமுடிந்ததது .

 3. Nanthini
  April 24, 2017 at 5:24 pm

  சிறிய மின் விளக்கு அதிக வெளிச்சம் சாம்பல் பூத்தத் தெருக்கள் . வாழ்த்துக்கள் 🙂

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...