பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை

2பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு கோலாகலமாக தொடங்கியது என்று சொல்வதற்கு எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. காரணம், ‘வரலாற்றைத் தேடி’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தழுவிய நிலையில் ஒரு மாபெரும்  மாநாடு நடக்கிறது என்ற காரணத்தினால், அதன் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வுக்கு மக்கள் தொண்டாளரான மதிமுக தலைவர் வைகோ கலந்து கொள்கிறார் என்ற செய்தியால் எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகியிருந்தது. தமிழர் முன்னேற்றக் கழகம் இந்த நிகழ்வுக்காகக் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வேலைகளைத் தொடங்கியிருந்தன.

நிகழ்ச்சிக்கான இடம், உணவு, மாநாட்டில் பேசுவதற்காக கலந்துகொண்ட மாநாட்டாளர்கள், இட வசதி, உட்காருவதற்கான  இடம், குளிர்சாதன வசதி, மேடை, மைக்  என்று அனைத்தும் மிகச்சிறப்பான ஏற்பாடாக மாநாடு வெற்றி பெற்றது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த பேச்சாளர்களுக்கும் எவ்விதக் குறையுமின்றி கவனித்து  அனுப்பியதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ஊடகக்காரர்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான இடவசதி, இணையவசதி உட்பட, அனைத்தையும் மிகச்சிறப்பான முறையிலேயே  ஒரு குறையுமின்றி ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்குரியது.

ஆனால், ஒரு நிகழ்ச்சி என்ற ரீதியிலும், ஒரு வரலாற்றுப் பதிவு என்ற ரீதியிலும், ‘அடையாளத்தைத் தேடி’ என்ற தலைப்புக்கு உட்பட்ட ரீதியிலும், இது ஒரு தோல்வியடைந்த நிகழ்ச்சி என்றே நான் சொல்வேன். காரணம்,  நிகழ்வே  ‘தமிழ் அனைத்துலக மாநாடு’  என்று அடிக்கோலிட்டிருக்கும் வேளையில், உலகத்தமிழர்கள் குறித்துப் பேசப்பட்டதா? என்ற கேள்வி அங்கு எழுகிறது.

உலகத்தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? அந்தச் சவால்களை எப்படிச் சந்திக்கிறார்கள்? எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதற்கான தீர்வு என்ன? அந்தத் தீர்வை எப்படி நடைமுறைப்படுத்துவது  உள்ளிட்ட பல விஷயங்களை அங்கு விவாதிருக்கலாம்.  தமிழின் தொன்மை வரலாறுகளைப் பெற்றுள்ள நாம், இன்று அந்த அடையாளத்தைத் தொலைத்துத் திரிகிறோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை.  ஆனால், அந்த  அடையாளத்தை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதை அந்த மாநாடு வலியுறுத்தியதா?  இந்தக் கேள்விக்கு மாநாட்டில் கலந்துகொண்ட எவராலும் ‘ஆமாம்’ என்று கூறிவிடமுடியாது. ஏற்பாட்டாளர்களைத் தவிர நிகழ்வில் கலந்துகொண்ட 300-க்கும் அதிகமானவர்கள்,  இதுவொரு முழுமைப் பெறாத நிகழ்வு என்று விமர்சித்தது பல இடங்களில் கேட்க முடிந்தது.

இந்த நிகழ்வில் சுமார் 6 அங்கங்கள் இடம்பெற்றன. 6 அங்கங்கள் என்பது 6 வகையான தலைப்புகளில்  தமிழ் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்தனர். அந்தத் தலைப்புகளில் ஒன்றிரெண்டு தவிர, அனைத்தும் இலங்கைப் போர் உள்ளிட்ட கட்டுரைகளாகவே இருந்தன.  இலங்கைப் போர் குறித்துப் பேசுவதும், அங்குள்ள மக்களின் நிலை குறித்துப் பேசுவதும்,  அவர்களின் வாழ்க்கை நிலையை உலகப்பார்வைக்குக் கொண்டு செல்வதிலும், தமிழர்களாகிய நமது பங்கு கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.  ஆனால், அது மட்டும்தான் தமிழர்களின் பிரச்னையா?  ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதும், மலேசியாவில்  இந்தியர்கள்  வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதும், தமிழகத்தில் தலித்துகள் இன்னும் கொல்லப்படுவதும் என இப்படியான விஷயங்கள் தமிழர்களுக்குப் பிரச்னை இல்லையா?  இங்கு வேலை செய்யும் இந்தியத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எத்தனை எத்தனை? அவர்களுக்கு இங்குத் தக்க மரியாதை கிடைக்கிறதா? அவர்களின்  வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கிறதா ?  போன்ற விஷயங்கள்  இந்தியத் தொழிலாளர்களின் அடையாளம் குறித்தான விஷயங்கள்தானே?

இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்புக்கு இன்னும் உணர்ச்சி பூர்வமாகக் குரல் எழுப்புகிறோம்.   இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் இருக்கும் இடத்திலெல்லாம் சாதியம், கௌரவக் கொலைகள், பாலியல் குற்றங்கள், தீண்டாமை வன்கொடுமை என்று தமிழர்கள் இன்று சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான  பார்வையை இந்த மாநாட்டில் ஏன் விவாதிக்கவில்லை?

இந்த மாநாட்டில் தமிழ் முஸ்லிம்களைக் குறித்து ஹஜி தஸ்லிம் பேசினார்.  இந்திய முஸ்லிம்கள் என்று கூறினாலும், இங்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்று கூறியதைத் தவிர, அவர் பேச்சு அனைத்தும் தன்நிலை குறித்தவையாக மட்டுமே அமைந்தது. நான் ஒரு வெள்ளாளன் பிள்ளை என்று தன் ஜாதியத்தையும், தன் முதல் திருமணம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த வாழ்க்கையில் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் ஆனால், தனது இரண்டாவது திருமணம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கிறது, ஆனால் பிள்ளைதான் இல்லை என்று அவரின் ஆண்மையை உணர்த்தும் கருத்துகள் அனைத்தும்  அவரின் அடையாளத்தை வந்திருந்தவர்களுக்கு உணர்த்தும் நோக்கம் கொண்டதே தவிர,  இதில் எந்தத் ‘தமிழரின் அடையாளத்தையும்’ உணர்த்தவில்லை.

DSC_0149இருந்தபோதிலும், மலேசியாவில் நடக்கும் இந்த மாநாட்டில் மலேசியத் தமிழர்களைப்பற்றி பேசவில்லையே என்ற கருத்து வெகு சத்தமாகவே ஒலிக்க தொடங்கியிருந்த வேளையில்தான், ‘மலேசியாவில் தமிழர்களின் சவால்களும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் குலசேகரன் பேசினார். வழக்கறிஞர் மனோகரன் குழுவினரும், மலேசிய வாழ் இந்தியர்களின் நிலை குறித்துக் கொஞ்சம் பேசினார்கள். ஆனால், இந்த மாநாடு இதைப் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு அல்லவே, அதற்கான காரணங்கள் தீர்வுகள் என்ன?

இந்த மாநாட்டின் மனம் நிறைந்த அங்கமாக மொரிஸியஸ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த ஆய்வாளர்கள், இந்தியர்களின் வாழ்வு முறையை மிக அழகாகப் பதிவுசெய்தனர். ஆனால், அவர்கள் தமிழ் மாநாட்டில் தமிழில் பேசாததுதான் பெரும் குறையாக அமைந்தது. அதற்கொன்றும் செய்யமுடியாது. அவர்கள் மொழியைத் தொலைத்திருந்தாலும்,  கலாச்சாரத்தைத் தொலைக்கவில்லை என்பது உண்மை. ஆனால்,  அவர்களில் பலர் ஆங்கிலத்திலேயே உரையாடியது வருத்தத்தைக் கொடுத்தது. கொஞ்சம் இதற்கு மாற்று வழியைத் தேடி இருக்கலாமே என்ற கேள்விக்கு, பேச்சாளர்கள் கூறிய பதில் இதுதான்: “ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தலாம் என்று கூறினார்கள். இப்போது தமிழில் உரை நிகழ்த்துவது என்பது சிரமம்.”

இந்த நிகழ்ச்சியின் லாபகரமான, அதாவது ‘அடையாளத்தை தேடி’ என்ற தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்த ஒரே உரையாக  பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டத்தோ எஸ்.எம். ஒமார் அரிஃபின் உரையைக்கூறலாம். இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை மலேசியர்களாக இருந்து, அதாவது இந்த நாட்டில் அரசியல், இனத்தைக்கொண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொருவரும் தன் இன அடையாளத்துக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்குச் சரியான ஒரு தலைமைத்துவம் இல்லாத காரணத்தினாலும், தமிழர்கள் சரித்திரப்பூர்வமாக இங்கே கூலிகளாகக் கொண்டு வரப்பட்ட காரணத்தாலும் , எல்லா நிலைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு , இந்தளவில் பின்னடைந்த சமூகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கொரு மாற்றம் வரவேண்டுமென்றால், இன அடிப்படையிலான அரசியல் மாற்றம் காணவேண்டும், அதற்கு இந்த நாட்டில் அனைவருக்கும் மலேசியர் என்ற எண்ணம் வரவேண்டும் என்ற வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகளாகும்.

DSC_0349சரி நிகழ்வில் கதாநாயகன் வைகோ. பழுத்த அரசியல்வாதி, அறிவாளி, தமிழ்ப்பற்று உள்ளவர். இந்த மாநாட்டுக்கு ஏகப் பொருத்தமானவர். எல்லாம் சரி. ஆனால், அவரை இங்கே கூட்டி வந்ததற்கான காரணம் என்ன? அந்தக் காரணம் இங்கு நிறைவேறியதா? வந்தவர் தமிழ் ஈழத்தைத்தான் கட்டி அழுகிறார். பாவம்! அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் இந்த மாநாடா? வைகோவிடம் ஒரு உலகளாவிய பார்வை இருக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் மத்தியில் விக்கிபீடியா செய்திகளையும், நடந்து முடிந்த  ஈழத்துப் போராட்டங்களையும், ‘என் தலைவர் பிரபாகரன்தான்’ என்ற பெருமையையும் கூறுவதற்கு அவர் 7 கடல்தாண்டி வந்திருக்கத் தேவையில்லையே. 30 வருடங்கள் கழித்து மலேசியாவுக்கு வந்திருக்கும் அவர், இங்குப் பதிவு செய்தது, செய்யவிருப்பது, செய்யப்போவது என்ன? ஈழத்துப் பிரச்னையை வைத்து விளம்பரம் தேடுவதாக இருந்தால், அதற்கு மலேசியா தேவையில்லையே.

எங்கள் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் எத்தனை பேரைச் சந்திப்பதற்கு வைகோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? அல்லது அவருக்குதான் ஆர்வம் இருந்ததா? முதல் நாள் கருப்புத் துண்டைப் போட்டபடி வைகோ, மறுநாள் கோட் சூட்டில் வைகோ, மூன்றாம் நாள் பட்டு வேட்டி சட்டையில் வைகோ இதுதான் நான் பார்த்து வந்த வைகோ. இதற்காகவா ஒரு நிருபராக 350 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தேன்?

முதல்முறை நடக்கும் மாபெரும் நிகழ்ச்சி என்பதால், குறைகள் இருக்கத்தான் செய்யும் என்பது உண்மைதான். ஆனால், சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாகத் திட்டமிட்டுச் செய்யும் ஒரு நிகழ்வில், இத்தனை பிசகுகளா? இந்த நிகழ்ச்சியைப் பல சவால்களுக்கிடையில் ஏற்பாடு செய்திருந்த பினாங்கு மாநில துணை முதல்வருக்கு நான் ஒன்று மட்டுமே கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

உங்கள் அரசியல் லாபத்துக்காகவும், உங்கள் செல்வாக்கை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்வதற்காகவும் மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் என் உள்ளம் கவர்ந்த தலைவர். மலேசிய இந்தியர்களுக்கு உங்கள் மீது தனிப்பாசம் உண்டு. உங்கள் அரசியல் தூணைப் பலப்படுத்தத் தமிழர்களின் வரலாற்றையும், அடையாளத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருப்பதாக மாநாட்டில் பலர் பேசினார்கள். உங்கள் காதுகளுக்கு அது எப்படி எட்டவில்லை என்பதுதான் எனது ஆச்சரியம்.

வரலாற்றைக் கண்டடையாத இந்த பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு, என்னைப் பொறுத்தவரையில் தோல்வியடைந்த வரலாற்றை மீட்டெடுக்காத ஒரு மாநாடுதான் என்பேன்.

1 comment for “பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை

  1. Pon Rangan( Tamilavan)
    January 6, 2015 at 2:18 pm

    குழப்பத்துக்கு முன் ஒரு விளக்கம்.

    பினாங்கு உலகத தமிழ் மாநாட்டை முன் நின்று நடத்திய பினாங்கு மாநில துணை முதல்வர்தான் மலேசியாவில் உலகத் தமிழர் இரண்டாம் பாதுகாப்பு மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார்.

    இதன் முதல் மாநாடு 2009 ல் தமிழக கோயம்பிதூரில் நடந்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக சுமார் 80 பேருடன் சென்றோம். அதன் பின் மலேசியாவில் தமிழர் எழுச்சி முகாம் நடத்தி தமிழர் தேசியம் என்ற அமைப்பின் வழி தமிழர் பாதுகாப்புக்கு கீழ் காணும் திட்டங்கள் வகுத்தோம் . மலேசியாவில் இரண்டாம் உலகதமிழர் பாதுகாப்பு மாநாடும் கடந்த 29/12/2012 நடந்தது. இங்கே  உலகத் தமிழர் செயலகம் அமைக்கா ஒத்துக்கொள்ள…

    இன்று புதியதாக ஒரு தமிழ் மாநாடு ?  உலகத்தமிழர் செயலாம் அறிவிப்பு.

    தமிழர் மாநாடு நடத்திய நாங்கள் இன்று எங்கள் தலைவர் தமிழ் மாநாடு நடத்தி முடித்து உள்ளார்.  இதை மொழி மாநாடாக எடுத்துக்கொண்டாலும்  தமிழ் “அரசியால்” வேட்க்கை  விநியோகம் ஆனது புதிய தமிழில் “வேற்கியல்” …….கமாகத்தான் உள்ளது. 

    இதில் குழம்பிய  தனியாக இன்னொரு மலையாள ஜென்மத்துக்கு எழுதிய பதிலை தருகிறேன் ….பாவம் பத்த்ரிக்கைகளுக்கு கைகாசு கொடுக்க முடிய வில்லை ..கட்டுரை தா லக்கு ? வல்லினம் தந்த பினாங்கு மாநில தமிழா /தமிழ் மான் ஆடா  விரிவாக்கத்துக்கு இதுவும் உதவும். நன்றி 

    கருத்துக்களத்துக்கு  போவோம்…

    உலகத்தமிழர் தூரம் சுருங்க வேண்டும்.
    Monday, Aug 18, 2014 3:19 pmமக்கள் கருத்து17 comments
    இதுதான் இன்றைய உலகத தமிழர்களின் சவால்.! ஆதி தமிழன் .பிறகு திராவிடன் என்ற பிரிவில் எந்த குறிப்பிட சமயத்துக்கும் சொந்தமில்லாமல் சமயத்தை (நேரம்) பார்த்து தமிழர்கள் கோட்டையில் பூந்து சுகம் காணும் கொட்டங்களை அடக்வே உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

    உலகத்தலைவர்களை காத்திடுமா உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று கடந்த 18/8/2014 தமிழ் மலரில் கேள்வி கேட்டிருந்தார் பண்டார் ஸ்ப்ரிங் ஹில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத தலைவர்.திரு மா .சசாசி மாணிக்கம் அவர்கள்.

    உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கதின்  நோக்கம் நீங்கள் நினைப்பது போல தலைவர்கள் மக்களை ஏமாற்றி சண்டைக்கு அனுப்புவது அல்ல. ம இ கா ,கோவில் ,பள்ளிகூடங்கள் போல மக்களிடம் வசூல் செய்து வாயில், வயிற்றில், இரண்டாம் வீடுகளுக்கு போட்டுககொள்வது அல்ல!

    தமிழர்கள் குறித்த பின் நோக்கு வரலாறு அறிந்து போதித்தல் / முன்னோக்கு குறித்த பாதுக்காப்பு சிந்தனை தெளிவு அடைதல். இதுவே இன்றைய பாதுகாப்பு சிந்தனை.

    நீங்கள் உங்கள் செய்தியில் குறிப்பிட்ட வர்ணனைகள் யாவும் அரசியல் ரீதியிலும், சமூக சங்கங்கள் ரீதியுலும் ஒரே பித்தலாட்டமாய் போய் சமுதாயத்தை இதரவர்கள் நாமம் போட்ட பட்டியலில் நாங்கள் மெதிப்பட  தயராக இல்லை.

    கடந்த ஆண்டு மட்டும் பாரிசன் இதுவரை 540 மில்லியனும் பாகாதான் இதுவரை 200 மில்லியனும் இந்தியனுக்கு தந்தார்களாம் . தமிழர்கள் பட்டியலில்  ஈசல் போல ஏய்ச்சி தின்னவர்கள் பட்டியல் இதுவரை வெளி இடாக்க்  காரம் ஏன்? உங்களை போன்ற அரசியல்( ஊனர்கள்) வாதிகளுக்குதான்  வெளிச்சம்.

    உண்மையில் தமிழச்சி காமாச்சி உரையில் ” நாமெல்லாம் மலேசியா தமிழர்கள் இந்தியர்கள் அல்ல” என்ற உண்மை வெளிப்பாட்டை எதிர்த்து நீங்கள் பத்திரிகையில் “நாமெல்லாம் மலேசியா இந்தியர்கள்” செய்தி எழுதி இருந்தீர்கள். அதற்கு நான் “இல்லை நாங்கள் மலேசியா தமிழர்கள்தான்” இதுதான் எங்கள் பாதுக்காப்பு போராட்டம் என்று பதில் தந்தேன் . அதற்கு நீங்கள் இப்போது கொள்ளை புறத்தில் வேலி கிழித்து எங்கள இயக்கத்தை மேய்ந்து இருக்றீர்கள்.

    நீங்கள் ஒரு ஆசிரியர் என்றும் ம இ கா தலைவர் என்றும் அறிகிறேன்.இதில் கோவில் தலைவராகவும் உள்ளீராம்.

    பாதுகாப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் உங்கள் சிறிய வாத்தியான் சிந்தனைக்கு விளங்காமல் போனால் நீங்கள் எங்ககளிடம் கற்க, கேற்க வேண்டும். எங்கள் இயக்க கொள்கை புரியாமல் உளறக்கூடாது. இப்படிதான் உங்கள் முன்னால் ம இ கா தலைவனும் கேட்டான்.

    பாதுக்காப்பு என்றால் சிந்தனையில் இன பாதுக்காப்பு அக்கறை வேண்டும். உனக்கு அது கிடையாது காரணம் உனக்கும் தமிழர் இனத்துக்கும் உறவே இல்லை. ஆனால் தமிழர்களை காட்டிக்கொடுத்து
    அவர்களுடையதை பிச்சிக்க படைத்த திராவிட இடையர்கள் நீங்கள். தமிழ் படிப்பீர்கள் ,ஆசிரியர் வேலை செய்வீர்கள் , மாடு டின்ன்பீர்கள் கோவில் தலைவர்கள் ஆவீர்கள் ,ம இ கா வில் ஓட்டை போடுவீர்கள் இந்தியன் என்று கோசம் போடுவீர்கள் ..வீடுதோறும் மட்டும் மஞ்சள் துணி போட்டு வேட்டு வைப்பீர்கள்.

    சமீபத்தில் கூட தமிழ்ப்பள்ளி  பிள்ளைகள் பற்றி எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியர்தானே ? நீங்களே உங்களை பார்த்து கேற்க வேண்டிய கேள்வியை யாரை பார்த்து கேட்டீர்கள் ?வெக்கமா இல்லையா? தின்பதெல்லாம் தமிழ் சோறு, சிந்தனை மட்டும் மலையாள மாங்காய்த்தனமா? சசாசி!

    2013- 2025 வரைக்குமான கல்வி கொள்கை மன்னாங்கட்டி என்றெல்லாம் தமிழ்ப்பள்ளிக்கும் UPSR /PT 3  என்றெல்லாம் குழப்பி தமிழ் மொழிக்கு ஆப்பு அடிச்சானுங்க உங்கள் மலையாள ,தெலுங்கன்  உங்கள் வாதிய்யான் அதிகாரிகள் வாத்து கூட்டங்கள் . என்ன செய்தீர்கள்.

    இதை எல்லாம் பார்த்துகொண்டு ஆய்வுகள் செய்வதுதான் தமிழர் பாதுகாப்பு இயக்கம். இதுக்கெல்லாம் காசு உங்க அப்பனா தருவான்? கேள்வி கேக்க வக்கு இருந்தால் முதலில் “சிந்திக்கனும்” அதுக்குதான் எங்கள் பாதுகாப்பு .சொம்மா கோழி போல நானும் முட்ட போட்டேன் என்று காலையில் கொக்கரித்து விட்டு மறுபடி முட்ட போட  …..முயற்சி பண்ணககூடாது? புரியும் என்று நினைக்கிறேன் தெரியாவிட்டால் அன்வாரிடம் கேக்கவும்.

    எங்களுக்கு சிந்தனை சொல்ல உனக்கு அறிவு போதாது.எங்கள் உலக இணைப்பு உனக்கு தெரியாது .பழ நெடுமாறன் தமிழர் தேசியம் , சீமான் நாம் தமிழர், தமிழர் களம் , தமிழ் தேசம் ,மலேசியா தமிழர் சார்ந்த இயக்கங்கள் ,தமிழ் ஈழம் என்று எங்கள் இயக்கம் தமிழர் சிந்தனை பாதுகாப்பில் இணைந்துள்ளோம். எங்களுக்கு வேண்டியதை தேடி வருகிறோம் . உங்கள் ஊனமான பழைய போக்கிரித்தனம் ஏமாற்றி வசூல்தனம் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. கிடையாது.

    ஏன் ஸ்ரீ முருகன் நிலையம் 27 மில்லியனை சமுதாயத்தை காட்டி வாங்கினார்கள் அவர்களை பார்த்து கேக்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேக்க கேவலமாய் இல்லையா?  இன்சூரன்ஸ் , YSS அறவாரியம், கலைஞர்கள் நிதி என்று எம்மாற்று வேலைகள்.இன்னும் சோதியோடு கிரிம்சன் ஊழல் ஏலம் எல்லாம் எழுத வேண்டுமா?

    உன் கேள்வியை மைகாவை தின்னவனை கேள். டெலிகொம்,தெநாகா, டோனியை கேள், ஞனலிஙகதை கேள்.விஜென்றனை கேள். செல்வனாதனை கேள். ராம ஐயரை கேள். வெல்பாரியை கேள். கூடி கெடுத்து மலேசியா தமிழர்களை மாற்றனுக்கு ஓட்டை போட்ட வேலை கேள்.

    அமைதியாய் எங்கள் இன பாதுக்காப்பு தேடி எங்கள் பகைவன் என்றோ மறைந்தான் இன்று திராவிடன் திமிரால் வந்துள்ள புதிய ஆபத்தை வெல்ல களம் காணவுள்ள எங்களை நீ திசை மாற்றி சீண்ட வேண்டாம்.

    தமிழர்கள் அறமும் வீரமும் வெல்ல பாதுகாப்பு தேடி போகிறோம்.தமிழன் நாடு ஈழம் உரிமைதான் எங்கள் பாதுக்காப்பு. BN பாகாதான் எச்சில் சோற்றுக்கு அரசியல் நடத்த வில்லை. உலகத்தமிழனை தட்டி எழுப்ப தீட்டும் சங்கோசை.” பாதுகாப்பு” என்பதின் பொருள் புரிந்து பேசவும், எழுதவும் இல்லையேல் சங்கு கழியும்!

    தமிழன் வரலாறு தெரியாமல் நாங்கள் பாதுகாப்பு வலயம் பின்னவில்லை…மீண்டும் ஒரு வரம்பு எழுதவே பாதுகாப்பு.
    இதில் இதரவர்களுக்கு இனி இடம் இல்லை “தாய் வழி தமிழன்
    தமிழ் வழி தமிழன்”   இதர மொழியான் அவர் அவன் மொழியை பார்க்கட்டும்.

    உணர்வில் தமிழனாய் உயிரும் கொடுப்போம்
    புணர்வின் செயலால்  புரிவோம் தமிழ் பணி  இணக்கம்.

    இது எங்கள் மனக்குரல்! இதோ எங்கள் இலக்கு !!

    உலக அரங்கில் தமிழர் என்ற பழந்தமிழர் வார்த்தை இடம் பெற
    பாதுகாப்பு வேண்டும்.

    தமிழ் நாடு என்ற மொழிவாரி அழுத்தம் மாறி தமிழர் நாடு என்ற இனம் காக்கும் பாதுகாப்பு வேண்டும்

    தமிழ் ஈழம் மலர தமிழர் நாடு மட்டுமே நம் இலக்கு

    தமிழ் ஈழம் தமிழர்களை உலக நாடுகள் ஏற்று அவர்களுக்கு
    அவரவர் வாழ் நாடுகளில் அகதிகள் நீக்கி பிரஜை உரிமை தரவேண்டும்

    தமிழர் வாழும் அவரவர் நாடுகளில் தமிழர் தேசியம் என்ற அரசியல் கட்சிகள் தோற்றுவிக்க வேண்டும்.

    12 கோடி தமிழர்கள் உலக தர வங்கி நடத்த தமிழ் தலைவன் உருவாக வேண்டும்

    உலக தமிழர் தேசியம் எனும் கலாச்சார மையம் வேண்டும்

    உலகில் தமிழன் தனி சிறப்பு பெற தமிழன் இண்டியன் பட்டியலில் இருந்து விடுபட வேண்டும்

    தமிழ் நமது தாய் மொழி என்ற உலக விழா தொடுக்க வேண்டும்

    தமிழ் உலக மொழி என்பதால்.உலக நாடுகள் அதன் பல்கலை கழக உரிமங்களில் தமிழ் பயிலும் ஆய்வுப்பிரிவுகள் நடத்திட வேண்டும் அதில் தமிழ் சென்செளர்கள் நியமனங்கள் இடம் பெற வேண்டும்

    தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் இடைநிலை பள்ளிகள் அமைவதற்கான உருமாற்று திட்டங்கள் வேண்டும்

    எல்லா ஜாதிகளையும் அழித்து தமிழன் என்ற ஒரே ஜாதியும் எம்மதமும் சம்மதம் எனும் சமய நெறியும் வளர்க்க வேண்டும்.

    தமிழன் பிறப்பு பத்திரங்களில் தமிழன் என்ற பதிவு வேண்டும்

    தமிழன் தமிழனுக்காகா US 1.00 மாதந்திர வங்கி சேமிப்பு செய்ய வேண்டும்

    தமிழனுக்கு தனி தீவு தனி குடியரசு அமைக்க உலக நாடுகளை கேக்க வேண்டும்

    தமிழன் என்ற தொலை காட்சி நிலையம் அமைக்க வேண்டும்.

    களம் காலம் கருதி நேர நிர்ணய விசியத்தில் தமிழன் தமிழனாக எழ தன குடும்பத்தில்  தமிழன் தமிழில் பேர் வைக்க வேண்டும்.

    இந்த  உன்னத நோக்கில் உலகதமிழர் பாதுகாப்பு இயக்கம் சேவை செயலாக்கம் பெற உணர்வாளர் தமிழர்களை பாதுக்காத்து வருகிறோம். ஒரு தாய் மக்கள் நாமென்போம்.

    ஈராண்டுகளை தப்பாக கணக்கிடுபவன் பத்தாண்டுகளை எமந்திருப்பான் என்கிறார்கள், இப்படிதான் கடந்த 1000 ஆண்டுகளை உலக தமிழன் இழந்து அவனுக்கு என்று மண் இல்லாமல் இருந்ததை இழந்து உள்ளான். உலக நாடுகளில் புலம் பெயர்த்துள்ள தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் தமிழராய் எழுவோம் தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் முன் உரிமை. என சிறியோர்க்கு ஞாபகம் செய் சங்கே முழங்கு.

    அவசரமாக் கோர்த்தது பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்…கருத்தை பாருங்கள் ,,நன்றி ! தமிழ் காத்து தமிழனை மீட்போம் .

    உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம் 
    இதர குழுமங்கள்.
    அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
    தமிழர் களம் தமிழர் நாடு . மலேசிய 
    நாம் தமிழர் தமிழர் நாடு 
    நாம் தமிழர் மலேசியா 
    தமிழர் பணிப்படை 
    தமிழர் தேசியம்
    தமிழ்த்தேசம் 
    மலேசியா தமிழர் மாணவர் இயக்கம்

    -Pon Rangan
    ammpon@gmail.com

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...