வல்லினத்தின் உள்ளார்ந்த ஈடுபாடு

03-siகெடா மாநில எழுத்தாளர் சங்க தலைவராக நான் இருந்த சமயத்தில் அச்சில் வந்த முதல் வல்லினம் இதழை அங்கு வெளியிட்டு அறிமுகம் செய்தோம். அவ்விதழுக்குப் பல படைப்புகளை நான் எழுதியிருக்கிறேன். இலக்கிய விமர்சனங்கள் அரசியல் விமர்சனங்கள், சமூக விமர்சனங்கள், சிறுகதைகள், சுய அனுபவ கட்டுரைகள் எனச் சொல்லலாம். அந்த காலகட்டத்திலேயே எங்களுக்குள் நெருக்கமும் தொடர்பும்  இருந்தது. அதற்கு முக்கிய காரணம் வல்லினத்தின் நோக்கம்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் ஒவ்வொரு இதழுக்கும் நூறு ரிங்கிட் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வழங்கிய பணத்துக்கு 25 புத்தகங்கள் எங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அந்தப் புத்தகங்களை நாங்கள் எங்கள் உறுப்பினர்களுக்கு நண்பர்களுக்கும் விற்பனை செய்தும் பகிர்ந்தும் கொண்டோம். நவீன இலக்கியத்தைத் தீவிரமாக இந்நாட்டில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான அவர்களின் உள்ளார்ந்த ஈடுபாடு முக்கியமானது. உள்ளார்ந்த ஈடுபாடில்லாமல் வெறும் காசுக்காக இதையெல்லாம் செய்யவே முடியாது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...