சென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்

FB_IMG_1536532013107‘யாவரும்’  தொடர்ந்து நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெற்றுவரும் பதிப்பகம். தூயனின் இருமுனை, சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை, எம்.கே.குமாரின் 5.12 P.M என இப்பதிப்பகம் வெளியிட்ட சிறுகதை நூல்கள் விருதுகள் மூலமும் விமர்சகர்கள் மூலமும் பரந்த கவனத்தைப் பெற்றன. வல்லினம் இவ்வருடம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கிறது.

இவ்விரு பதிப்பகங்களும் இணைந்து வெளியிடும் இந்நூல்களில் மூன்று மட்டும் 16.9.2018 (ஞாயிறு) சென்னையில் அறிமுகம் காண்கிறது. மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல் தொகுப்பு), போயாக் (ம.நவீன் சிறுகதைகள்), ஊதா நிற தேவதைகள் (சினிமா கட்டுரைகள்) ஆகிய நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியீடு காண்கின்றன.

எழுத்தாளர் ஜெயமோகன் ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நூலை வெளியீடு செய்து உரையாற்றுகிறார். அதேபோல எழுத்தாளர் சு.வேணுகோபால் ‘போயாக் சிறுகதை’ தொகுப்பு குறித்தும், கவிதைக்காரன் இளங்கோ சினிமா கட்டுரைகள் குறித்தும் உரையாற்றுகின்றனர்.

யாவரும் பதிப்பக நிறுவனர் ஜீவ கரிகாலன் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ம.நவீன்  மற்றும் சரவண தீர்த்தா ஏற்புரை வழங்குவர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...