மூன்று நாள் இலக்கிய முகாம்

cropped-j-1.jpgவல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன்,  எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் சாம்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சுமார் 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் நவீன இலக்கியம்அநர்ட் சார்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். எனவே நவீன இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஏற்பாட்டுக்குழு வலியுறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் சில மலேசிய நூல்கள் வெளியிடப்படுவதோடு வல்லினம் விருதளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வல்லினம் விருது இதற்கு முன்பு 2014இல் எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசிய இலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்விருந்து ஐயாயிரம் ரிங்கிட் தொகையுடன் விருது பெறும் எழுத்தாளரின் நூல் ஒன்றும் பதிப்பித்து வெளியீடு செய்யப்படும்.

நேரடியாக இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் திரு.குமாரசாமி: 0134315359 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.

வல்லினம் இந்த நிகழ்ச்சிக்காக இலவச பேருந்து வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. பேருந்து கோலாலம்பூரிலிருந்து 20.12.2019 காலை 10.00 மணிக்குப் புறப்படும். பேருந்தில் இணைந்து வர விரும்புபவர்கள் ம.நவீன்: 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ரி.ம 100 ஆகும். இக்கட்டணத்திற்கான இருநாள் தங்கும் வசதி உணவுகள் என அனைத்தும் ஏற்பாடு செய்துத்தரப்படும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...