சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது

1567261808_tmp_வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு 2019க்கான வல்லினம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே வல்லினம் இலக்கியக் குழு இவ்விருதை வடிவமைத்துள்ளது. இவ்விருதை ஒட்டி சை.பீர்முகம்மது அவர்களின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலும்  பதிப்பிக்கப்படுகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சி கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் 22.12.2019 (ஞாயிறு) அன்று காலை 10.30க்கு நடைபெறும். இதில் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வேணுகோபால், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வர்.

நவம்பர் வல்லினம் ‘சை.பீர்முகம்மது சிறப்பிதழாக’ தயாராகும். எழுத்தாளர்கள் அவர் புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

5 கருத்துகள் for “சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது

 1. September 1, 2019 at 5:02 pm

  மலேசிய இலக்கியத்தை அயலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் சை பீர் முகம்மதுக்கும் மிக முக்கிய இடமுண்டு.அவ்வுழைப்பு அவருடைய பொருளாதாரப் பின்புலத்தைக் கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்டது. வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்தார். முதலில் வந்த தொகுப்பில் தன் கதை இடம் பெறவில்லை என்று சிலர் ஆதங்கப்பட மூன்று தொகுதிகள் வரை கொண்டு வந்து பலரைத் திருப்தி படுத்தினார். அதனால் தன் கை கடிபட்டதுகூடப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவற்றை விற்று போட்ட பணத்தை மீடக பெரும் சிரமப் பட்டார்.சமீபத்தில் அதே தொகுப்பை மறு பதிப்பு செய்து மீண்டும் கொண்டு வந்தார். இந்த முறையும் அச்செயல் தன் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தது என்று சொன்னார். இலக்கிய போதை அந்தக் கடியையெல்லாம் பொருட்படுத்தாது என்பதற்கு அவர் நல்ல உதாரணம். ளவருக்கும் வல்லினத்தும் என் மனம் நிறைந்த நெகிச்சி.

 2. Sunthari Mahalingam
  September 1, 2019 at 9:23 pm

  Valthukkal

 3. Rv
  September 5, 2019 at 12:57 am

  Our heartily Thanks for “Vallinam” award committee. By honoring the renowned Tamil writer S. Peer Mohamed, “Vallinam” steps forward in their goal.

  Note: Kindly, request our commenters i.e ” Sunthari Mahaligam”, use Tamil fonts or English fonts to express the views, please do not create new Tamil version.

  Rv. Chennai.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...