பேய்ச்சி சர்ச்சை குறித்து சிறு விளக்கம்

controகடந்த ஒரு மாத காலமாகப் பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுவதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இது பொதுவாக இலக்கியச் சூழலில் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் இம்முறை வல்லினம் தரப்பில் இருந்து  போலிஸ் புகாரும்  கடித வழி தொடர்பாடல்களும் நடத்தப்பட்டன.

முதல் புகார் பேய்ச்சி நாவலின் சில பகுதிகள் மட்டும் அதன் ஆசிரியர் ம.நவீன் படம் தொலைப்பேசி எண் வேலையிட முகவரி  ஆகியவை இணைக்கப்பட்டு புலனத்தில்  பரவப்பட்டபோது சுய பாதுகாப்பு கருதி ஒரு புகார் செய்தார். அச்செயலுக்கு வித்திட்டவர்களின் பெயரும் அப்புகாரில் பதிவு செய்யப்பட்டது.

அடுத்ததாக நாளிதழ்களில் வெளிவந்த அறிக்கையில் ந.பச்சைபாலன் அவர்கள் மலேசியத் தமிழாசிரியர் இலக்கியக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அவ்வியக்கத்திடம் கடிதம் வழி அணுகி விசாரிக்கப்பட்டது. அவ்வியக்கம் திரு.பி.எம். மூர்த்தி அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதாலும் வல்லினம் நிகழ்ச்சிகள் அவ்வியக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டுள்ளது என்பதாலும் இயக்கத்தின் நிலைப்பாட்டை அறிய அக்கடிதம் எழுதப்பட்டது. இயக்கத் தலைவர்கள் கொடுத்த பதிலின் அடிப்படையில் ந.பச்சைபாலன் எழுதிய கடிதம் இயக்கத்தின் அனுமதி பெறாமல் எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. இதன் அடிப்படையில் ந.பச்சைபாலனிடமிருந்து இயக்கத்தின் பெயரைத் தவறாக பயன்படுத்தியமைக்காக வருத்தம் கோரி 27.2.2020 இல்  கடிதம் ஒன்றையும் பெற்றோம்.

இச்சூழலைப் பயன்படுத்தி, வல்லினம் விமர்சன சுதந்திரத்தை முடக்க முயல்கிறது என  சிலரால் கருத்துரைக்கப்படுகையில் அது தவறான வரலாறாக மாறிவிடக்கூடாது எனும் எண்ணத்தில் இதைப் பதிவிடுகிறோம்.

ஒரு படைப்பை குறித்துச் சொல்லப்படும் எதிர்மறை  கருத்துக்கு எதிராக வல்லினம் செயல்படவில்லை. ஒரு நாவலில் சில வரிகளைப் படத்துடன், தொலைப்பேசி எண்ணுடன் இணைத்துச் சமூக ஊடகத்தில் பகிர்வது இலக்கிய விமர்சனமாகாது. அது ஆபத்தான உள்நோக்கம் கொண்ட செயல்  அது குறித்து சுயபாதுகாப்பு கருதி புகார் செய்ய வேண்டியது அவசியம். அதே சமயம் தனி மனிதர் கருத்து ஒரு இயக்கத்தின் கருத்து என பகிரப்படுவது ஓர் இயக்கத்துடன் உள்ள நல்லுறவைக் கெடுக்கும். அது நாளிதழில் வரும்போது தவறான வரலாற்றுப்பதிவாகிவிடும்.

இவ்விரு நோக்கத்தினால் வல்லினம் மேற்கொண்ட செயல்களில் இறங்கியது. மற்றபடி பேய்ச்சி மட்டும் அல்லாது வல்லினம் வெளியிட்டுள்ள எந்த நூல் குறித்தும் படைப்புகள் குறித்தும் கறாரான விமர்சனம் செய்யவும் நிராகரிக்கவும் வாசகர்களுக்கு உரிமை உண்டு. நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...