இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது

                                இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது

வல்லினம்

வல்லினம் இலக்கியக் குழு  மூத்தப் படைப்பாளிகளை கௌரவிக்கும் பொருட்டும் அவர்கள் படைப்புகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவும் வல்லினம் விருதை 2015இல் தொடங்கியது. இவ்வருடம்  இளம் எழுத்தாளர்களுக்கான ‘வல்லினம் விருது’ ஒன்றை அறிமுகம்  செய்ய உள்ளது. விருது தொகையாக 2000 ரிங்கிட்டும் நினைவு கோப்பையும் இந்த தேர்ந்தெடுக்கப்படும் இளம் படைப்பாளிக்கு வழங்கப்படும். தரமான இளம் படைப்பாளிகளை அடையாளம் காட்டுவது, அவர்கள் படைப்புகளை விரிவான தளத்துக்கு எடுத்துச் செல்வது, அவர்கள் தொடர்ந்து இயங்க ஊக்குவிப்பது எனும் நோக்கத்துடன் இந்த விருது இவ்வருடம் அறிமுகம் காண உள்ளது.

18.10.2020 (ஞாயிறு) தைப்பிங் நகரில் அமைந்துள்ள விடுதியில் (HOTEL GRAND BARON)  இந்த விருது வழங்கும் விழா நடைபெறும். எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் ஜா.ராஜகோபாலன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும். எனவே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் முன் பதிவு செய்துக்கொள்ளலாம்.

விருது குறித்து விரிவான தகவல்கள் ஜூலை மாத வல்லினம் இதழில் காணலாம்.

.

பொது நிகழ்ச்சி.

அனைத்துத் தொடர்புகளுக்கும் : ம.நவீன் (0163194522)

* தற்போதைய கொரோனா தொற்றின் சூழல் பொருத்து நிகழ்ச்சி நடைபெறும் நாளில் மாற்றம் நிகழலாம். தங்கள் வருகையைப் பதிந்துகொள்வதன் வழி அவ்வப்போதைய மாற்றங்கள் புலனம் வழி அறிவிக்கப்படும்.

7 கருத்துகள் for “இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது

 1. Priya Thurai
  May 1, 2020 at 1:33 am

  புதிய தலைமுறையினர் படைப்பிலக்கியத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட, ஊக்குவிக்கும் சிறந்த, மிகத் தேவையான முயற்சி! அரசாங்கம், பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் முன்னெடுக்க வேண்டிய ஒரு பெரும் முயற்சியை வல்லினம் குழு முன்னெடுத்திருக்கிறது. வல்லினம் மென்மேலும் வளர்ந்து, இலக்கியத்துறையில் நீடித்து நிலைக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

  பிரியா துரை

 2. Ragu
  May 1, 2020 at 2:02 am

  Hi Navin and Vallinam team,

  You all have been doing a great job all warm wishes to all in this challenging time too!

  All the best for the new initiative and you all are doing a great job to empower the young mind!

  The way you have put up all your efforts to enhance Malaysian Tamil literature is remarkable and deserves every bit of appreciation.
  Within you is the absolute power to rise above any situation or struggle, and transform it into the strongest and the most beautiful version of you ever. Great job team!

  There are three types of people in this world: those who make things happen, those who watch things happen, and those who wonder what happened. You all are belong to the first group.

  A small group of thoughtful, committed people can change the world.

  Stay safe and take care.

  “Initiative is doing the right thing without being told.”
  – Victor Hugo, French writer

  Ragu.R

 3. Sunthari Mahalingam
  May 2, 2020 at 12:25 am

  Vallinam eppoluthume puthiyavargalukku sirantha paathayai vakutthu thantullathu. Thanggal seevai thodara manamaarntha vaaltukkal.

 4. கலைசேகர்
  May 2, 2020 at 4:14 pm

  சிறந்த திட்டம். இந்த அங்கீகாரத்தை அடையவிருக்கும் இளம் எழுதாளருக்கு வாழ்த்துகள்.

 5. sriviji
  May 8, 2020 at 2:20 pm

  இன்றைய சூழலில் வல்லினம் கொடுக்கின்ற எழுத்தாளர் அங்கீகாரம் என்பது, ஒரு சிறந்த நிலைப்பாடாகவே காண்கிறென். வாழ்த்துகள் அனைவருக்கும்.

 6. Sivaranjani R
  May 28, 2020 at 10:51 pm

  வெளியிடப்படாத குறுநாவல்களை விருதிற்கு அனுப்பலாமா ?

  • வல்லினம்
   June 29, 2020 at 6:17 pm

   தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இது நூலுக்கான விருது அல்ல

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...