ம.நவீனின் 3 நூல்கள் முன்பதிவு

121186603_3713636348649416_3408449428132008046_o

ம.நவீனுடைய மூன்று நூல்கள் வல்லினம் மற்றும் யாவரும் கூட்டு முயற்சியில் இவ்வருடம் வெளிவருகிறது.

மூன்று நூல்களின் விபரம்:

1.உச்சை சிறுகதை தொகுப்பு – 2020இல் ம.நவீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்டை ஓடி, போயாக் ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு வெளிவரும் மூன்றாவது சிறுகதை நூல்.

2.மனசிலாயோ – ம. நவீன் கேரளாவில் 21 நாள் மேற்கொண்ட பயண அனுபவ நூல் இது. கேரளாவில் இருந்தபோதே நவீன் தன் தளத்தில் எழுதிய பயண குறிப்புகளின் விரிவாக்கப்பட்டத் தொகுப்பு. கேரள சுற்றுப்பயண நூலாக மட்டுமல்லாமல் எழுத்தாளனின் அகச்சிக்கல், அலைக்கழிப்புகள், மனவிடுதலை என உள் நோக்கிய பயண நூலாகவும் இது இருக்கும்.

3.மலேசியா நாவல்கள் – மலேசியாவின் பத்து மூத்தப் படைப்பாளிகளின்  39 நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் குறித்து நவீன் இந்தத் தொகுப்பில் ரசனை விமர்சனம் அடிப்படையில் அணுகுகிறார். கறாரான முறையில் மலேசிய நாவல்களின் இடத்தை உருவாக்க முயலும் கட்டுரைகள் இவை. மலேசிய நாவல்கள் குறித்த விரிவான உரையாடலுக்கு இந்நூல் வழியமைக்கும்.

இந்த மூன்று நூல்களும் முன்பதிவு செய்வதன் வழியே தபாலில் பெற முடியும். புத்தகம் டிசம்பர் இறுதிக்குள் கைகளில் கிடைக்கும். எனவே வாசகர்கள் இம்மாத இறுதிக்குள் தொகையைச் செலுத்தி முன்பதிவை உறுதி செய்ய வேண்டும்.

வங்கி எண்: 512400202204 – Kaanal Publication (Maybank)

ரசீது, பெயர், முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை 0163194522 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...