Author: வல்லினம்

கலை இலக்கிய விழா 10

இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத்…

“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

மருத்துவர் மா.சண்முகசிவா மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. 1987 – இல் ‘அகம்’ எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலமாக படைப்பிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மலேசிய இலக்கியத்தின் தரமும் படைப்பாளர்கள் தரமும் உயர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் மேலோங்கி இருந்தது. இவருடைய தொடர் முயற்சி இன்றைய…

“எல்லா துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது”

மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் தீவிரத் தன்மையுடன் இயங்கி வருபவர் எழுத்தாளர் அ.பாண்டியன். இடைநிலைப்பள்ளியின் ஆசிரியரான அ.பாண்டியன் வல்லினம் இதழின் பொறுப்பாசிரியரும் கூட. வல்லினம் அகப்பக்கத்தில் தொடர்ந்து பல முக்கியமான கட்டுரைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் விமர்சனத் தன்மையைக் கொண்டவை. அவரது முதல் நூலான ‘அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை’ தேசிய…

“மலேசியாவில் பெண்ணியம் சார்ந்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை.”

வல்லினம் ஆசிரியர் குழுவில் ஒருவரான இரா.சரவணதீர்த்தா ஆரம்பக் காலக்கட்டத்தில் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தவர். நாட்டின் தமிழ்ப் பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றியவர். தொடர்ந்து வல்லினம் மேற்கொண்டு வரும் கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தீவிரத் தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். இவரது உலக சினிமா குறித்த கட்டுரைகள் வல்லினத்தில் தொடராக வெளி வந்தவை. அவை பலராலும் விரும்பி…

“இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது.”

விஜயலட்சுமி மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகத்தின் நூலகவியலாளர். நவீன தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். நல்ல பயனான கட்டுரைகளைத் தந்தவர். குறிப்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடம் காணப்படும் அறிவுத்துறை மற்றும் பதிப்புத்துறை சார்ந்த தெளிவின்மையைக் கலைவதற்கான முயற்சியாக ‘துணைக்கால்’ எனும் நூலை வெளியிட்டவர். அந்நூல் பதிப்புத்துறை மற்றும் அறிவுத்துறை சார்ந்த விடயங்களைத் தெளிவுபடுத்தும்…

“எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.”

ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன்…

முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

மலேசியாவில் வெளிவரும்  ‘மன்னன்’ மாத இதழுக்கு நேர்காணல்கள் செய்யத் தொடங்கியது 1999களில். அது வெகுசன இதழ். எனவே நேர்காணல்களின் நோக்கம் வாசகர்களை உற்சாகப்படுத்துவதாய் இருந்தது. எனவே சமகாலத்தைய நிகழ்வுகளின், சலசலப்புகளின் அடிப்படையில் நேர்காணல்களில் கேள்விகளை அமைத்திருப்பேன். ‘காதல்’ இலக்கிய இதழ் தொடங்கப்பட்டபோது அதில் மாதம் ஓர் எழுத்தாளரின் நேர்காணலைப் பிரசுரிப்பதென முடிவானதும், அப்பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன்.…