Author: வல்லினம்

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…

மலேசியாவில் நடந்தது என்ன? – அ.மார்க்ஸ்

கோலாலம்பூரில் ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு’ 24-25.06.2017 ஆகிய இரு தினங்கள் நடைப்பெற்றது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தமிழக திராவிட கழக பேச்சாளர்களும், திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களும் திரளாக வந்திருந்தனர். மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு வருகை…

“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

சீ.முத்துசாமி 1949-ஆம் ஆண்டு மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமரர்களான சீரங்கன் முத்தம்மாள் தம்பதிகளின் மூத்தமகனாகப் பிறந்தார். 1973 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் எழுதி வருகிறார். இவர் படைப்புகள் மலேசியாவில் தனித்துவமான எழுத்து பாணியைக்கொண்டவை என்பதோடு பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின்…

சிங்கை ஆளுமைகள் பற்றிய ஆவணப்பட வெளியீடும் இலக்கியச் சொற்பொழிவும்

சிங்கப்பூரில் தமிழ்ச்சூழலில் இயங்கும் மூத்த எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான், மா.இளங்கண்ணன் ஆகியோரின் ஆவணப்படங்களைச் சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆதரவில் வல்லினம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் சிறப்பு வருகை புரிகின்றனர். ஆவணப்பட வெளியீட்டுடன் பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும் இந்நிகழ்ச்சி…

நடமாடும் பள்ளிக்கூடம்

13.5.2017- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளியீடுகாணும் ம.நவீனின் ‘மாணவர் சிறுகதை’ எனும் நூலுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்கள் எழுதிய அணிந்துரை. யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப்பட்டறையுடன் நடைபெறும் இந்த வெளியீட்டில் கலந்துகொள்ள மாணவர்களின் முன் பதிவு அவசியம். தொடர்புக்கு: தயாஜி 0164734794 / 0149005447 சிறுகதை என்கிற நவீன இலக்கியவடிவம் தமிழில் தோன்றிய நாள் முதலே…

வல்லினம் பொறுப்பாசிரியர் அ.பாண்டியன்

வல்லினம் தொடர்ந்து புதிய சாத்தியங்களை மலேசிய இலக்கியச் சூழலில் உருவாக்க முயன்றுவருகிறது. அவ்வகையில் கடந்த சில மாதங்களாக எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் வல்லினம் இதழை வழிநடத்தினார். அவரது மேற்பார்வையில் வல்லினத்தில் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களும் தமிழகத்தில் புதிய தலைமுறையினரின் படைப்புகளும் சங்க இலக்கிய அறிமுகங்களும் அதிகம் இடம்பெற்றன. இது வல்லினம் இதழுக்குப் புதிய முகத்தைக்…

இறுதிச்சுற்றுக்கான படைப்புகள்

வல்லினம் இவ்வாண்டு தொடங்கியப் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஏப்ரல் 2017 இறுதியுடன் நிறைவடைந்தது. இம்மாதம் (மே மாதம்) தொடங்கி அனுப்பப்பட்டப் படைப்புகளில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவை மட்டும் வல்லினத்தில் பிரசுரமாகும். அவ்வகையில் இம்மாதம் ஒரு கட்டுரை, ஒரு பத்தி இரு சிறுகதைகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறுகின்றன. தொடர்ந்து செப்டம்பர் வரை இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் படைப்புகள் வல்லினத்தில் பிரசுரமாகும்.…

படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் வல்லினத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

வல்லினம் குறுநாவல் பட்டறை & சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

வல்லினம் இவ்வாண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குறுநாவல் பட்டறையைத் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் வழிநடத்துவர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் மலேசிய சிங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் குறுநாவல் இலக்கியம் வளர வல்லினம் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவ்வகையில் வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டத்திற்காக இந்தப்…

வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ 2017

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி வல்லினத்துக்கு அனுப்பப்படும் சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டது! – அரு.சு.ஜீவானந்தன்

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் அரு.சு.ஜீவானந்தனை முற்போக்கு இலக்கியத்தின் முகம் எனச்சொல்லலாம். இவரின் பல சிறுகதைகள் அக்காலக்கட்டத்து வாசகர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோலவே இன்றும் சில வாசிப்புக்கு ஏற்றதாய் உள்ளது. இலக்கியச் சூழலில் தனது கருத்துகளை சமரசமின்றி வைக்கும் அரு.சு.ஜீவானந்தன் தனது சிறுகதைகளிலும் கலாச்சார மீறல்களைச் செய்துப்பார்த்தவர். சில காலமாக புனைவிலக்கிய உலகில் இருந்து…

நாஞ்சில் நாடன் பதில்கள்

இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன? மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், சாதி அரசியல் நடத்தும் அரசியல்.…

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் நூல்கள்

6.1.2017 – இல் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் குழுவினர் கலந்துகொள்வர். வல்லினம் பதிப்பித்த நூல்களை புலம் புத்தக அரங்கில் வாங்கலாம்.