
1 வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது. எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய…