Author: லோகேஷ் ரகுராமன்

சுழி

வெளியே நல்ல வெயில். ரேஷன் கடையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்துவிட்டார்கள். சாமான்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தேன். வீட்டு வாசலில் இருந்து பார்த்தபோது வீட்டின் பிரதான கதவு திறந்தே கிடந்தது. ஸ்கேன் எடுக்கச் சென்றிருந்த தாயும் மகளும் வந்துவிட்டார்கள். வாசல் கதவை அப்படியே திறந்து போட்டுவிட்டு உள்ளே ஏதோ ஒரு…

ஒரு வட்டம் பல மையங்கள்: குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை முன்வைத்து

அன்றைய இரவு, இரவுணவு முடித்துவிட்டு நானும் என் மனைவியும் அடுக்களையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அவள் சிங்க்கில் பாத்திரப்பண்டங்களைத் துலக்கிக்கொண்டிருந்தாள். நான் மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். மொழுகி வைத்த மேடையை எந்தத் துணியால் துடைக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது, பால்கானியில் காயும் நீல கலர் கைப்பிடித்துணி அதை எடுத்துக்கோ என்றாள். நான் பால்கனிக்கு…

மூவிலைத் தளிர்

பாடியநல்லூர் குமரப்பாவுக்கு நீரிழிவு நோயால் வலது கால் மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதோ வலது காலில் பின் பகுதியில் எதுவோ குத்தி காயம் ஏற்பட்டிருக்கிறது. அது மூன்று மாதம் ஆகியும் ஆறவில்லை. அந்த முதல் புண்ணைச் சுற்றி மேலும் சில இடங்களிலும் புண்கள் வந்திருந்தன. அவையும்…