
“நம்மளாவது வாரத்துக்கு ஒரு வாட்டியாவது அவனுகளைப் பாக்குறோம். இந்த அர்த்தராத்திரில இப்பிடி ஒரு கூட்டம் முழிச்சுக்கிட்டு இருக்குறது அவனுகளுக்கு என்னைக்காவது தெரியுமா?” இப்போதுதான் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் அவனுகளைப் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள் செந்திலும் பாபியும். அவனுகள் என்பது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள மனிதர்கள். “அவனுகளுக்கு ஏண்டா தெரியணும்? நம்ம தலையெழுத்து இங்க கிடந்து சாகணும்னு…” என்றான் கொட்டாவியை…