
உலர்ந்தவை, உலராதவை 1. எனக்குப் பிறகு உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் பாவமாய் இருக்கிறது நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை எதைக்கொண்டு அள்ளி முடிவாள் நீ மறக்க முடியாமல் அவ்வப்போது உச்சரிக்கப் போகும் என் பெயர் இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும் உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை,…