ராமசாமி அவர்களுக்கு…

cover-issue61ராமசாமி அவர்களுக்கு,எனக்கு அனுப்பப்பட்ட டிராஃப்டில் உங்கள் பெயர்களைக் காணவில்லை. அது தவிர, ஈழத் தமிழர் தோழமைக் குரலில் பங்கு பெற்ற படைப்பாளிகள் பலர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு , இந்த அறிக்கை சுற்றில் விடப்பட்டிருப்பதாகவும், அதில் நாங்கள் கையழுத்திடவில்லை என்றும் தெரிவித்திருந்ததால், அதை கருத்தில் எடுத்துக்கொண்டேன். இந்த காலகட்டத்தில், படப்பிடிப்பிற்காகவும், திரையிடலுக்காகவும் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், என் தொலைபேசி மூலமாக மட்டுமே இணைய தொடர்பு இருந்தது. அதில் தமிழ் தளங்களெல்லாம் பார்க்க முடியாததால் சென்னைக்கு வந்த இன்று தான் உங்கள் எதிர்வினையையும், அறிக்கை இணைப்பையும் பார்த்தேன்.

 உங்களுக்கு என்ன மறுப்பு சொல்ல?ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை அல்ல போர் தான் என்று என் படம் சொல்வதாக எழுதியிருக்கிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்? இனப்படுகொலை – போர் இரண்டு வார்த்தைகளுக்கும் பொருள் விளக்கம், ஆறு வித்தியாசம் தந்தீர்கள் என்றால் அடியேன் தெரிந்துக்கொள்வேன். படங்களைப் பார்த்தீர்களா?  வேண்டியவரை செங்கடல் குறித்தும், வெள்ளை வேன் கதைகள் குறித்தும் பல பேட்டிகளில், கட்டுரைகளில் பேசியாகிவிட்டது. அந்த படங்களின் டிவிடி, திரைக்கதை புத்தகம் எல்லாமும் வெளிவந்துவிட்டது. விருப்பமிருந்தால், நீங்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைக்கலாம். அதற்குப் பிறகு உங்கள் கருத்துக்களை கேட்க விருப்பம். நன்றி.

மேலதிக தகவல்களுக்கு 
www.whitevanstories.com

Facebook page: https://www.facebook.com/pages/White-

Twitter: https://twitter.com/whitevanstories

Promo 1: http://www.youtube.com/watch?v=aeDjbLOrP6M

Promo 2:http://www.youtube.com/watch?v=ClQdu81jc0s

Promo 3: http://www.youtube.com/watch?v=sT-Zd3Hu3T0

With John Snow : http://www.youtube.com/watch?v=YlBnLMGglQ0

Reading for Amnesty International : http://www.youtube.com/watch?v=38runisTOC0&feature=youtu.be

Channel Four News Feature on White Van Stories: http://www.youtube.com/watch?v=-E12gULGChU&feature=c4-overview&list=UUTrQ7HXWRRxr7OsOtodr2_w

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...