
‘புதுக்கவிதை நதிக்கரை’ என்ற இணைய சந்திப்பின் காணொலியைப் பார்க்க நேர்ந்தது. ஊரடங்கு காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது முக்கியமானது. அவ்வகையில் கவிஞர் மனஹரன் மற்றும் சுதந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான பேச்சாளர்களை, ஆய்வாளர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியைக் கட்டமைத்தால் இதுபோன்ற முயற்சிகள் மேலும் சிறந்த பலனைக் கொடுக்கும். …