Author: மஹாத்மன்

புதுக்கவிதை நதிக்கரை: ஓர் எதிர்வினை

‘புதுக்கவிதை நதிக்கரை’ என்ற இணைய சந்திப்பின் காணொலியைப் பார்க்க நேர்ந்தது. ஊரடங்கு காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது முக்கியமானது. அவ்வகையில் கவிஞர் மனஹரன் மற்றும் சுதந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான பேச்சாளர்களை, ஆய்வாளர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியைக் கட்டமைத்தால் இதுபோன்ற முயற்சிகள் மேலும் சிறந்த பலனைக் கொடுக்கும். …

அற்புதம்

அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக…

இரட்சிப்பு

ஏழாவது முறையாக சிறையிலிருந்து விடுதலையாகிறேன். கடந்த ஆறுமுறையிலும் எங்கு போவது என்ற போக்கிடம் தெரியாமலிருந்தேன். இந்தமுறை கொஞ்சம் ஞானம் வந்ததுபோல அடங்கியிருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நானாகத் தேடிக்கொண்டதும் சிக்கிக்கொண்டதும் மூன்றுமுறை. அதிரடிச்சோதனைக்கு ஏதாவதொரு பெயரிட்டு கிடப்பில் கிடந்த ஏதாவதொதொரு கோப்புக்குப் பலியானது மீதி. தைப்பிங் சிறை, தாப்பா சிறை, புடு சிறை, சுங்கை பூலோ…

பொட்டலம்

உள் நுழைந்ததும் வலது பக்கமாக பார்த்துப் போவீர்களேயென்றால் படிகள் தென்படும். முதல் மாடிக்குச் செல்லுங்கள். இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என்று ஏதுமில்லை. முதல் மாடி மட்டும்தான். வலதுபக்கமாகத் திரும்புங்கள். நேராகச்சென்று மறுபடியும் திரும்புவீர்களென்றால் நான்கைந்து விதமான உணவருந்தும் இருக்கைகள் இருக்கும். இரு மருங்கிலும் காணலாம். வலது பக்கத் தொடக்கத்திலேயே வெண்ணிறப் பிரம்பு நாற்காலிகள் உண்டா,…

ஜின்ஜாஹோ

ஜின்ஜாஹோ என்பது அவனது பெயரல்ல. கூப்பிடும் பெயர். அவனது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவனை நிற்கவைத்து உண்மையான பெயரைக் கேட்டால்கூட ஜின்ஜாஹோ என்றுதான் பதில் வரும். அடையாளக் கார்டு இல்லை. அது அவனுக்கு எந்தவிதத்திலும் தேவைப்படவில்லை. ஜின்ஜாஹோ தலைநகர் குடிவாசி அல்ல. எப்போது இங்கு வந்து சேர்ந்தான் என்றுகூட துல்லியமாய்ச் சொல்ல இயலாது. ஆனால்…

விடுபடுதல்

மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன். பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும்…

கேலிச்சித்திரத்துக்கான உச்சம் அதிகாரத்தை நோக்கிப் பாய்வது!

மொத்தம் பதினைந்து தலைப்புகளைக் கொண்டு ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் பத்திகளடங்கிய தொகுப்பு தயாஜியின் முதல் நூலாக வெளிவந்திருக்கிறது. நல்லதொரு ஆரம்பம்தான். இந்த ஆரம்பத்திலேயே படைப்பின் பலத்தையும் பலவீனத்தையும் சார்பற்ற நிலையில் விமர்சிப்பது தொடரும் வெளியீடுகளில் நன்மையைக் கொண்டு வருமென நம்புகிறேன். இத்தொகுப்பில் கவன ஈர்ப்பும் முக்கியத்துவமும் கொண்டவையாக ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்’ மற்றும் ‘ஒளி புகா…

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன். இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய…

கடன்

அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த்…