
இன்றைய காலக்கட்டத்தில் மலேசியாவில் படைப்பிலக்கியம் கொஞ்சமும் தீவிரத்தன்மை இல்லாமல், கேளிக்கைத்தனமாகத்தான் பார்க்கப்படுகின்றது. எந்த எழுத்தாளர் சங்கமும் இதனைத்தான் முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு இருக்கும் மொழியை வைத்துக் கொண்டு பத்திரிகையில் கதை கவிதைகளை எழுதுகிறவர்கள் பலர். அவை பிரசுரமானதும் மகிழ்ச்சியடைந்து விடுகிறார்கள். அதுதான் இலக்கியம் என நினைக்கிறார்கள். கேளிக்கைகளைக் கொண்டாடுகின்ற மனம்…