16.3.2014ல் ‘புத்தகச் சிறகு’ நிறுவனம், இலக்கிய நிகழ்வொன்றை கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நிகழ்த்தியது. இணையம் எவ்வகையான விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை அறிய ‘புத்தகச் சிறகு’ இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் அனைத்தையும் இணையம் மூலமே செய்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை 100 பேரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.வல்லினம் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளான ம.நவீன் மற்றும் கே.பாலமுருகனின் கவிதை தொகுப்பு இந்நிகழ்வில் அறிமுகம் கண்டது. இவ்விரு கவிதை நூல் குறித்தும் அ.பாண்டியன், விஜயலட்சுமி, தினகரன், பூங்குழலி மற்றும் யோகி தங்கள் பார்வைகளைப் பகிர்ந்துகொண்டனர். புத்தகச் சிறகு இளம் வாசகர்களின் வாசிப்பு மற்றும் புரிந்தலின் தன்மையை அறிய இளம் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களும் முக்கியத்துவம் கொடுத்தது.
மேலும் இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, வல்லினம் குழுவினர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பறை’ எனும் சிற்றிதழ் வெளியீடு கண்டது. மிக விரைவில் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குச் செல்லவுள்ள இவ்விதழ் ‘கலை, இலக்கிய, அரசியலை’ முன்னெடுக்கும் தீவிரத்துடன் வெளிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலாய் மற்றும் சீன இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள பறையின் அவ்விதழுக்கான ஆசிரியர்கள் தினேசுவரி மற்றும் பாண்டியன் வெளியிட எழுத்தாளர் ஜெயமோகன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு வருகையளித்து , ‘காலம் தோறும் கவிதைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இவ்வுரையை வல்லினம் காணொலியில் வாசகர்கள் முழுமையாக காணலாம். (http://www.youtube.com/user/vallinammagazine)
வாசகர்களின் அமோக ஆதரவுடன் முடிவுற்ற இந்நிகழ்வில் வெளியீடு கண்ட கவிதை நூலையும் ‘பறை’ சிற்றிதழையும் பெற புத்தகச் சிறகு நிறுவனத்தை அணுகலாம்.
அனைத்து தொடர்புக்கும் : 0149005447
——-
எழுத்தாளர் ஜெயமோகன் உரை
ஜெயமோகனின் உரையை யூ டியுப்பில் போட்டது நல்ல முயற்சி. வாழ்த்துகள்