குறும்பட இயக்கமும் அதன் வெளிபாடும் சமகால சமுதாயத்திற்குத் தேவையெனக் கருதி வல்லினம் ‘குறும்பட பட்டறை’யை இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது. மலேசிய இயக்குனர்களோடு தமிழக இயக்குனர்களின் பங்களிப்பும் இந்தப் பட்டறையில் இணையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய இயக்குனர்கள் சஞ்சை குமார் பெருமாள், பிரகாஷ் ராஜாராம், செந்தில் குமரன் முனியாண்டி போன்றோரின் வழிக்காட்டலுடன் நடைபெறும் இப்பட்டறையின் இறுதியில் குறும்படம் தயாரிப்பதற்கான உதவிகளையும் வல்லினம் வழங்கி அதை தேசிய அளவில் கொண்டுச்செல்லவும் துணைப்புரியும்.
விதிமுறைகள்
- 18 வயதுக்கு மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் இந்தப் பட்டறையில் கலந்துகொள்ளலாம்.
- கலந்துகொள்ள விண்ணப்பிப்பவர்கள் பட்டறையின்போது முழுமையாகப் பங்கெடுத்தல் அவசியம்.
- பட்டறைக்கான இடம் மற்றும் திகதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே தொலைப்பேசி, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
பட்டறையில் பங்குபெற நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளித்தல் அவசியம்.
- நீங்கள் ஏன் குறும்படம் தயாரிப்பதை முக்கியமாக கருதுகிறீர்கள்? (Tell us why is it important for you to make a short film?)
- திரைத்துறை தொடர்பில் உங்கள் எதிர்கால திட்டங்கள்/கனவுகள் என்ன? (What is your future plans/dreams in term of film making?)
- உங்களுக்குப் பிடித்த 3 திரைப்படங்களைப் (உள்ளூர்/ உலக திரைப்படங்கள்) பட்டியலிடுக. (List 3 of your favorite films (local /international movies)
- ஏன் உங்களுக்கு அந்த திரைப்படங்கள் பிடித்திருக்கின்றன என்பதை விரிவாக பகிருங்கள். (2/3 பத்திகளில்) (Elaborate in detail on why you like those films – 2/3 paragraphs)
(இவற்றோடு உங்கள் முழு பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண், கல்வி, அடையாள அட்டை எண், தொழில் மற்றும் முந்தைய அனுபவங்களையும் குறிப்பிட்டு கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி நாள்: 15.5.2014)
சிறப்பான முயற்சி… கற்று வெள்க..
good attempt
done
நன் முயற்சி… நலமே வரட்டும்.