முக்கோண கதைகள் – 2

வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள்-2 இலக்கிய விழா டிசம்பர் 6-ஆம் திகதி தலைநகரில் உள்ள Kuala Lumpur & Selangor Chinese Assembly Hall இல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் பல்லின எழுத்தாளர்களும் பங்கெடுக்கின்றனர். தமிழுக்கு மொழியாக்கம் கண்ட பத்து சமகால மலாய்ச் சிறுகதைகளின் தொகுப்பு, மலாய்க்கு மொழிபெயர்க்கப்பட்ட சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு, மஹியின் ஆங்கில கவிதை தொகுப்பின் தமிழ் மொழியாக்க நூல் ஆகியவை இந்த விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர் அ. பாண்டியன் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இவ்விழாவில் வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தலைமை தாங்குகிறார்.

மலேசியாவில் பல்லின எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்களையும் அதன் வழியாக பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் உருவாக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்ஹ ஆண்டு இவ்விழா பெற்றிருந்த மிகச்சிறந்த வரவேற்பைத் தொடர்ந்து இவ்வாண்டும் இக்கொண்டாட்டம் தொடர்கிறது.

இந்த விழாவில் மூன்று கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. எழுத்தாளர் அஸ்ரின் ஃபௌஸி, விஸ்வர்நாதன், சல்மா ஆகியோர் பங்கெடுக்கும் அரங்கை அரவின் குமார் வழிநடத்துகிறார். இவ்வுரையாடல் மலாய்மொழியில் நடைபெறும். தமிழ்மொழிக்கு ஆக்கம் கண்ட மலாய்ச் சிறுகதைகள் குறித்து இந்த உரையாடல் இடம்பெறும்.

தொடர்ந்து, ஃபஸ்லீனா ஹிஷாமுடின்,ஜோஹன் ராட்ஸி, ஃபராஹின் ஆகியோர் உரையாடும் அரங்கை கி. இளம்பூரணன் வழிநடத்துவார். பத்து சமகால தமிழ் எழுத்தாளர்களின் மலாய் மொழிபெயர்ப்பு சிறுகதை நூல் குறித்த உரையாடலாக இது அமையும். தமிழின் சமகால சிறுகதைகள் குறித்த பிற மொழி எழுத்தாளர்களின் பார்வை இந்த அரங்கில் பகிரப்படும்.

மூன்றாவது அங்கமாக இந்த நூல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட அ. பாண்டியன், சரவணன் சத்தியானந்தன்ம், சாலினி ஆகியோர் பங்கேற்கும் அரங்கு இடம்பெறும். இந்த அரங்கை ப்ருத்விராஜ் வழிநடத்துவார், மொழிபெயர்ப்பில் தங்கள் அனுபவங்களையும் கையாண்ட நுட்பங்களைப் பற்றியும் மூன்று எழுத்தாளர்களும் பகிர்வர்.

நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக ஆசிர் லாவண்யா பங்களிக்கிறார். மலாய், ஆங்கிலம் என இருமொழியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

மலேசிய இலக்கிய வரலாற்றில் மூன்று மொழியில் இயங்கும் சமகால எழுத்தாளர்கள் ஒன்றுகூடும் விழாவாக இது அமையும். அதே சமயம் மூன்று மொழி இலக்கியங்களுடனான உரையாடலுக்கும் இந்த நூல் வெளியீடுகள் வித்திடும்.

நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக ‘பென் மலேசியா’ சார்பாக  மஹி ராமகிருஷ்ணனும் வல்லினம் சார்பாக விஜயலட்சுமியும் அவர்கள் நன்றியுரை ஆற்றுவார்.

நிகழ்ச்சி விபரங்கள்:

நாள்: 6.12.2026 (ஞாயிறு)

நேரம் : மதியம் 2.00 – மாலை 5.00

இடம் : Kuala Lumpur & Selangor Chinese Assembly Hall

இவ்விழாவில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். கீழ் உள்ள இணைப்பில் முன்பதிவு செய்யவும். கூடுதல் தகவல்களுக்கு ம.நவீன் 0163194522, அ. பாண்டியன் 0136696944 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய / For Registration: https://forms.gle/JZsGLMUqVCLHVQ7X7

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...