தொப்பையை குறைப்பது பற்றி இணையத்தில் தேடும்போது இங்கே வந்திருக்கலாம். நானும் எவ்வளவோ செய்து பார்த்தாச்சி இது வேறயா என வாய்விட்டு பேசி, யாருக்கும் தெரியாமல் இதனை நீங்கள் படிக்கத்தொடங்களாம். ஒவ்வொரு மாதமும் இந்த பக்கத்தில் எந்த சர்ச்சயை கண்டுக்கொள்ளலாம் என இங்கு வந்திருக்கலாம். நீங்கள் செய்துக்கொண்டிருக்கும் பயற்சியோ, செய்துக்கொண்டிருக்கும் முயற்சியோ இத்தலைப்பில் ஒத்துப்போகிறதா என பார்க்க இதனை படிக்கலாம். எது எப்படியோ தொடர்ந்து படியுங்கள்.
முதலில் தொப்பை எப்போது பிரச்சனையாகிறது. உடலளலவில் இருந்து வயிறு தனியே வளரும் போதா..? குனிந்து நிமிர சிரமப்படும் போதா..? சட்டை பட்டன் வயிரிடத்தில் மட்டும் இறுக்கமாகும் போதா..? அடிக்கடி கால்சட்டை சில அடி கீழிறங்கும் போதா.?
இக்கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கும். மொத்த பதிலுமே தொப்பை குறித்துதான் சொல்லி முடியும். குறிப்பாக நண்பர் ஒருவர் நம்மை கவனித்து தொப்பை குறித்து சொல்லும் போது சட்டென பிரக்ஞை தோன்றும். அதோடு சொன்னவர் நம்மைவிட வயதில் மூத்தவராய் இருந்து வயிறும் உப்பிடாமல் இருந்துவிட்டால் கேட்டவர்க்கு தூக்கம் போச்சி. தொப்பையை குறைக்க வேண்டி பெரும்பாலும் முயன்று தோற்றவரும் சுலபமாக மெலிந்து காட்டியவரும் நம்மிடையே இருக்கிறார்கள்.
சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. மேடை நிகழ்ச்சி ஒன்றுக்கு அறிவிப்பாளராக இருந்தேன். இருக்கமான ஜிப்பா அணிந்திருந்தேன். சில தமிழ் காக்கும் நிகழ்ச்சிகளில் புடவையையும் ஜிப்பாவையும் அணிந்து மட்டும்தான் தமிழை காக்கவேண்டியுள்ளது. பேசி முடித்து மேடையின் பின் புறம் வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தேன். பார்வையாளர்களில் ஒருவர், அதிக நேரம் கவனித்திருப்பார் போல. தள்ளாடி தள்ளாடி என்னை தனியே அழைத்து, “தம்பி மேடையில பார்த்தேன் தெரியல ஆன இப்பதான் தெரியுது..உங்களுக்கு இப்பவே லேச தொப்பை வந்திருக்கே….”
பிறகு அடுக்கடுக்காய் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கும் தொப்பை இருந்ததால் அவரின் அறிவுரைகள் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை. ஆனால், தனியே அழைத்து பேசியதில் அவரின் நேர்மை பிடித்திருந்தது. சத்தமாக பேசி மற்றவர் கவனத்தை ஈர்ப்பதைவிட சொல்ல நினைப்பதை சொல்ல வேண்டியவரிடம் சொல்லிவிடுதல் உத்தமம்!
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவிற்கு வந்திருந்தார். கலைநிகழ்ச்சி. பலரும் அவரை பார்க்க வேண்டும் மேடையில் அவர் பாடும் குரலை கேட்கவேண்டுமென்பதில் எவ்வளவு ஆர்வம் காட்டினார்கள் என்பதை வானொலி போட்டிகளிலும் முகநூல் பதிவுகளிலும் தெரிய வந்தது.
தேசங்கள் கடந்த கலைஞனாகவே ரஹ்மான் இருக்கிறார்.அது விஷயமில்லை.
ரஹ்மான் வந்து சென்றதும், முகநூலில் அந்த நிகழ்ச்சி குறித்து ஒருவர் மகிழ்ந்து எழுதியிருந்தார். அப்பதிவை ஒட்டி சிலர் கருத்திட்டிருந்தார்கள். சட்டென ஒரு ‘தமிழ் புலி’ உள்ளே நுழைந்து ‘என்னவோ சொல்லுங்க ரஹ்மான் தமிழில் ஒரு வார்த்தை கூட பேசாதது என்னமோ எனக்கு சரியா படல.. எத்தனை தமிழங்க அவருக்கா போயிருந்தாங்க…’. நான் அந்நிகழ்ச்சிக்கு போகாததால், ரஹ்மான் குறித்து அவர் சொல்வது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்பதிவை குறித்து பேசவேண்டியுள்ளது என நினைக்கிறேன். அப்பதிவின் கீழ் என்னால் எதையும் எழுதிட முடியாது. அப்படி ஒருவேளை ஏதேனும் நான் எழுதியிருந்தால் எழுதியதை படிக்காமலும் கருத்தினை புரியாமலும் என்னை திட்டுவதைலேயே இன்பம் காணும் இதயம் கொண்டவர் கூடி கும்மாளம் போட்டிருப்பார்கள். உண்மையை பேசுபவர்களைவிடவும் உடனிருப்பவர்களுக்காக பேசுகிறவர்கள்தான் சில வட்டங்களில் அதிகம்.
இசையை ரசிக்கும் மனம் மொழியையோ இனத்தையோ பாகுபடுத்தி பிரித்து பார்த்திடாது. அவர் தமிழில் பேசவில்லை என்று தன்னை தமிழ் காவலராக காட்ட நினைப்பவர்களின் மனம் ஏதோ ஒரு வகையில் விளம்பர விருப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். உண்மையில் தமிழராய் பிறந்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் எளிய வழியில் தனக்குத்தான் தமிழ் பற்று அதிகம் தமிழ்தான் மூச்சி, தமிழ்தான் பேச்சி எனறு கோஷமிட்டு பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டு பலருக்கு வழிகாட்டியாக தன்னை மாற்றிக்கொள்ளலாம்.
ரஹ்மான் இசையை, திசைகளைத் தாண்டி கொண்டு சென்ற பின்னரும், அவர் தமிழில் பேசவில்லை என்று குறைபடுவதும். சட்டென, இசைக்கான அவரின் உழைப்பை தூசாக்குவதும் என்ன மாதிரியான செயல்.
கேள்விகளை அதற்குரியவரிடம் கேட்பது கூட கலைதான். சரியான வார்த்தைகள் கொண்டு, தகுந்த கருத்தாழத்தோடு உரையாடுவதும் நல்லதொரு கலைஞனின் அடையாளம்தான். அதைத்தான் பொதுவில் கொண்டு சேர்க்கவேண்டுமே தவிர ஒரு பக்க கருத்தைக் கொண்டு ஊர் முழுக்க பயணித்தால் காலப்போக்கில் கருத்தும் இருக்காது கருத்திட்டவரும் இருக்கமாட்டார். அனால் அதன் பாதிப்பு மட்டும் கலை மனதில் வலியாய் தன்னன பதிவு செய்திருக்கும். பின்னர் ஒரு சமயம் இச்சமூகம் அவ்வலியை தானும் உணரும் நேரம் வரும்.
தள்ளாடி தள்ளாடி வந்து தனியே அழைத்து கேட்டவருக்கு இருந்த கலையுணர்வு கூட இல்லாதவர்கள்தான் கலையையும் கலைஞனையும் பேசியும் எழுதியும் வருகிறார்கள் என்றால். இனி அக்கலை….? ஆகாமலிருக்கட்டும் கொலை.
உங்களின் வயிறு உப்பியிருந்தால்; தொப்பைதான் என்றிருந்தால் கையை வைத்துப்பாருங்கள். உங்களால் ஓட முடிகிறதா, மூச்சிரைக்காமல் மாடிப்படி ஏற முடிகிறதா, குறட்டையின்றி தூங்கி எழ முடிகிறதா. முக்காமல் முணகாமல் காலை கடனை முடுக்கிறீர்களா. ஆமாமென்றால் தொப்பையால் ஒன்றும் உங்களுக்கு பெரிய பிரச்னையில்லை. குறைத்திடலாம். முயற்சித்தும் குறைத்திட முடியாமலிருந்தால், ஆரோக்கியத்தை கெடுக்காத எதுவும் உடனிருப்பதில் எப்போதும் பிரச்சனையில்லை.
தொப்பை உருவாகி வளரும் போது அப்படி ஒரு மாற்றம் நிகழ்வதே தெரியாது. ஆனால் தொப்பை வளர்ந்து உருவாகி விட்டால் பின் அதை குறைப்பது ஆல்லது இல்லாமல் ஆக்குவது பின் ஆதை அப்படியே தக்க வைத்துக் கொள்வது என்பது அத்துணை சுலபமானது இல்லை. இதில் சிக்ஸ் பேக் என்பது சாதாரண மனிதர்களுக்கு குதிரைக் கொம்புதான். கடும் உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளிகளுக்கு தொப்பையே இருக்காது என்ற ஒரு மாயை பொதுவாக மக்களிடம் உண்டு. உண்மையில் அதுவும் உண்மை இல்லை. எத்தனயோ கடும் உடல் உழப்பு தொழிலாளர்கள் பெரிய பனை அளவு தொப்பையோடு இருப்பதை பார்க்க முடிகிறது. சில உடல் வாகுகளுக்கு இயல்பாகவே அல்லது சுலபமாகவே வயிறு தொப்பை போடாமல் இருப்பதுவும் காண முடிகிறது. ஆனால் தொப்பையோடு வாழ்வது இயல்பு அல்லது சின்ன தொப்பையே அழகு என்றும் பணத் தொந்தி, அழகுத் தொந்தி என்று பெருமை படும் சமுதாயம் நமது சமுதாயம். இன்றய நவீன காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தையும் உடல் இளமையையும் நீண்ட நாள்களுக்கு தக்க வைக்கும் முனைப்பில் மனித இனம் முனைப்புக் காட்டுகிறது. ஏறத்தாள பொருளுதார வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் ஆரோக்கிய விளிப்புணர்ச்சியும் கொண்ட நாடுகளில் எல்லாம் தொப்பை இன்றி வாழ்வது அல்லது அதற்கும் ஒரு படி மேலே சென்று சிக்ஸ் பேக் அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பது ஒரு வாழ்வியல் முறையாகவே ஆகி வருகிறது. இன்றய கால வளர்ச்சியில் பல்வேறு தேவையே இல்லாத வீணான பழக்க வழக்கங்கள் மலிந்து வரும் காலகட்டத்தில் இந்த தொப்பை குறைப்பு கலாச்சாரம் உண்மையில் மிக மிக வரவேற்க்கத்தக்க பழக்கமாக கொள்ள வேண்டியுள்ளது. உடல் ஆரோக்கிய மேம்பாட்டு மற்றும் ஆலோசனைக் குறிப்புகளில் கூட தொப்பை என்பது குறிப்பாக 45 வயதுக்குள் ஏற்படும் தொப்பை என்பது ஆரோகிய வாழ்க்கை முறையற்ற தன்மை அல்லது குறைபாடு என்றே கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. தொப்பை இல்லாமல் வாழ்வது அல்லது சிக்ஸ் பேக்குடன் வாழ்வது என்பது உணவுக் கட்டுப்பாடு, கால ஒழுக்கம், தவறாத முறையான உடல் பயிற்சி, நேரக் கட்டுப்பாடு (Time Management), தன் உடல் ஆரோக்கியம் மற்றும் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களில் முழு விழிப்புணர்வு, மனோ பலம், தாங்கும் சக்தி எனப் பல் வேறு கூறுகளையும் உள்ளடக்கியது. என்னைப் பொறுத்தவரை 45 வயது வரை ஒரு மனிதர் ஆணோ பெண்னோ உடல் கட்டுக் கோப்புடனும் சிக்ஸ் பேக்குடனும் இருக்கிறார் என்றார் அவர் மிக சிறந்த உடல் ஆரோக்கிய ஒழுக்கம் மிக்கவராகவே பார்க்கிறேன். இஃது எல்லோராலும் எளிதில் கை கொள்ள முடியாத ஒரு விடயம். 45 வயதுக்கு மேலும் ஒரு மனிதர் தன் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக தக்கவைத்து இருப்பாரே ஆனால் அவரை சிறந்த சாதனையாளராகவும் பாராட்டுக்குரியவராகவும் பார்க்கிறேன். ஆக தொப்பைக் குறைப்பு அல்லது தொப்பை இல்லாது வாழ்வது என்பது நவீன விழிப்புணர்வு மிக்க மனிதர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வோரு மனிதனின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அப்படி தக்கவைத் திருப்போரை வாய்திறந்து பாராட்ட வேண்டும். இதில் சிக்ஸ் பேக் அளவு உடலை கடும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையில் ஒருவர் தக்கவைத்திருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக சிறந்த பாராட்டுக் குறியவராக கொள்ள வேண்டும். தொப்பை என்பது சோம்பல், சிக்ஸ் பேக் என்பது கடும் உழைப்பு. ஒரு 6 மாதத்திற்கு முயன்று பார்த்தால் அதன் உழைப்பு புரியும்.
விளம்பரப்பிரியர்களின் அட்டூழியம் தொடரட்டும். அங்கே தமிழ் இல்லை. ஆயா சுடும் வடையில் தமிழ் இல்லை. ஆப்பக்கடை வாசலில் தமிழ் இல்லை. தமிழ் பள்ளி காவலாளி பேட்ஜில் தமிழ் இல்லை. மீன்கடையில் தமிழ் இல்லை, மிளகாய் மில்லில் தமிழ் இல்லை, பேனரில் தமிழ் இல்லை, போனில் தமிழ் இல்லை என புலம்பி, கடிதம் எழுதி அதை பத்திகைகளுக்கு அனுப்பி, அது எதாவதொரு பத்திரிகையில் வந்தால், “பாத்தியா, நான் எப்படி வாங்கியிருக்கேன் என்று, ஹ்ம்ம் யாருகிட்டே..!!? ’’ என்று அவர்களே, ஷோக் செண்டீரி பண்ணிக்கிட்டும். அதனால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.
அழகான எழுத்துநடை. எழுத்துச் சாயலில் மாற்றம் தெரிகிறது. நன்றாக உள்ளது. தொடருங்கள் தம்பி.