கலை இலக்கிய விழா சிறப்பிதழ்

This slideshow requires JavaScript.


வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கிய விழா 2.11.2014ல் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை அரங்கத்தினருக்குப் புரிய வைத்தது. அடுத்ததாக ‘வல்லினம் விருது’ பெறப்போகும் எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் வாழ்வைச் சொல்லும் படக்காட்சியும் திரையில் ஒளிபரப்பானது. இவ்விரு படத்தொகுப்பையும் எழுத்தாளர் நவீன் செல்வங்கலை அவர்கள் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 – 2014: வல்லினம் நிகழ்வுகள் ஒரு பார்வை

அ. ரெங்கசாமி காணொளி

நிகழ்வை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் வல்லினம் மற்றும் பறை இதழ் ஆசிரியர் ம. நவீன் உரையாற்றினார். வல்லினம் குறித்த முன்முடிவுகளை அவர் தனது உரையில் முற்றாக மறுத்தார். வல்லினம் மொழியைக் காப்பதற்காகவோ, பெரியாரியத்தை வளர்ப்பதற்காகவோ, மார்க்ஸியத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமல்ல எனக்கூறிய அவர் சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கவே வல்லினம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். சிந்திப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது எனவும், அதை எவ்வாறு கடந்து செல்வது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

ம. நவீன் உரை

அ. ரெங்கசாமியின் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ நூலை மா. சண்முகசிவா வெளியீடு செய்தார். இயக்குனர் லீனா மணிமேகலை முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீடு

தனது உரையில் ரெங்கசாமியின் அந்நூல் குறித்து சண்முகசிவா விரிவாகப் பேசினார். ஒரு சுயவரலாறு நூல் எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் உரை இருந்தது. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் மா. சண்முகசிவா அ. ரெங்கசாமியின் சுயவரலாறு நூல் குறித்து பேசினார்.

மா. சண்முகசிவா உரை

அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து பேச கெடாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அ. ரெங்கசாமிக்கு தமது தியான மன்றம் மூலம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ எனும் விருது கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் அவரது இதர நூல்களை வாசித்தவர் என்ற முறையிலும் அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து விளக்கினார். இதற்கு முந்தைய மூத்த தலைமுறையின் தியாகத்தில் இருந்தே இன்றைய தலைமுறை மேலோங்கி செல்கிறது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.

சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி உரை

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அ. ரெங்கசாமிக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வழக்கறிஞர் சி. பசுபதி அவர்கள் அ. ரெங்கசாமிக்கு விருது கோப்பை, விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காலோசை, வெளியிடப்பட்ட நூலுக்கான ராயல்டி தொகை இரண்டாயிரம் என வழங்கி சிறப்பு செய்தார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் சி.பசுபதி, மாற்று சிந்தனைகள் சமூகத்துக்கு உயரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என கூறினார். அதோடு, வல்லினம் ஓர் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக மாறுவதன் வழி நாடு முழுக்கவும் அதன் தீவிரமான மாற்று சிந்தனை பரவும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வழக்கறிஞர் சி. பசுபதி உரை

முதல் அங்கத்தின் நிறைவாக, விருதைப் பெற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமி பேசினார். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வல்லினம் தன்னை அடையாளம் கண்டு விருது கொடுத்ததை மகிழ்ச்சியான தருணமாகப் பகிர்ந்துகொண்டார். தமிழர் எனும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அ. ரெங்கசாமி உரை

முதல் அங்கம் ஏறக்குறைய நிறைவு பெற இரண்டாம் அங்கம் தொடங்கியது.

எழுத்தாளர் கே.பாலமுருகன் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் கவிதை, திரைப்படம் என விரிவாக தனது ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்தார்.

கே. பாலமுருகன் உரை

அதன் பின்னர் இரண்டாவது அங்கத்தை கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை வழி நடத்தினார். முதலில் அவரது ஆவணப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. தனது திரைப்பட முயற்சி குறித்து சுருக்கமாகப் பேசியவர், அவையினரிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். திரைப்படம், சமூகம், அரசியல், ஈழம் என அவர் பதில்கள் விரிவாகவும் ஆழமாகவும் இருந்தன.

லீனா மணிமேகலை உரை & கலந்துரையாடல்

மாலை 5.30க்கு அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


வல்லினம் கலை, இலக்கிய விழா 6 புகைப்பட தொகுப்பு

2 comments for “கலை இலக்கிய விழா சிறப்பிதழ்

  1. Pon Rangan( Tamilavan)
    November 14, 2014 at 8:40 am

    Pon Rangan wrote on 5 November, 2014, 12:32
    தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே!
    தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ?
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
    தமிழ் மாநாடுகளும் தமிழர்களும் – நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்தியதன் பலன்தான் என்ன? 2013 -2025 மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு ஆபத்து, அழிவு என்று தமிழ் அறவாரிய திரு ஆறுமுகம் அவர்கள் கத்தை கத்தையாய் ஆய்வு செய்துள்ளார். அவரை யாரும் அழைத்து தமிழ் சிக்கலை பேசாத மாநாடுக்கு பேர் தமிழ் மாநாடு ? தமிழ் நாட்டில் தமிழும் தமிழ் இனமும் தமிழ் ஈழ சிக்கலும் சிரிப்பா சிரிக்க வைகோ வந்து இங்கு என்ன கிளப்ப போறார்…..?
    தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?
    உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
    தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
    பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
    தோள்கள் திமிரட்டும்
    துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
    தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
    வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
    நட்பே ஜெயிக்கட்டும்…. இந்த பாடலை மீண்டும் மீண்டும் பாடி பார்க்கிறேன் ! ஆனால் அந்த தமிழ் ,தமிழன் வெற்றி திசை மட்டும் தெரியவில்லை ?
    2014 இறுதி இரண்டு மாதங்களில் பினாங்கில் உலகத்தமிழ் மாநாடு, கோலாலம்பூரில் 10 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் விழா என்று மூன்று முத்தான நிகழ்வுகள் நடக்க உள்ளது மனதுக்கு மகிழ்ச்சிதான்.
    இதில் பினாங்கு மாநாடு புதிதாக முளைத்துள்ளது. உலகத்தமிழ் ஆராச்சி மாநாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிளை மறுபடி முளைத்துள்ளது. தமிழ் விழா கடந்த 7 ஆண்டுகளாக ஒரு தமிழ் ஆர்வலர் தனி பாஸ்கரன் முயற்சியில் நலமே நடந்து வருகிறது.
    உலகத்தமிழ் ஆராச்சி மாநாடும் .
    புதிதாய் வந்துள்ள பினாங்கு உலக தமிழ் மாநாடும் இரண்டு பலம் பெரும் அரசியல் வாதிகள் நடத்தும் மாநாடுகளாகும்.
    மூன்றும் தமிழுக்கு மகுடம் சூட்டும் மாநாடுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை. கடலில் கப்பல்கள் இலக்கு நோக்கி அடைய முன்பெல்லாம் கடல் கரை விளக்கு வைத்து கப்பல்கள் வந்து கரையை தொடும். இப்போதெல்லாம் பல திசை காட்டிகள் இருப்பதால் மாலுமிகள் தூங்கினாலும் தமிழ் கப்பல் கரையை தொட்டுவிடும்.
    எனக்குத்தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இனி சாவும் என்று யாரோ சொன்னதாக ஒரு புலம்பல் இன்றுவரை உண்டு. இதை பொய்யாக்கிய பெருமை மலேசியா தமிழர்களுக்கு உண்டு என்பதை உலகம் அறியும், தமிழர் நாட்டு இலக்கிய அறிவர்களும் இதை ஒப்புக கொண்டு நம்மை பாராட்டுகின்றனர் என்பதில் மகிழ்ச்சிதான்.
    இதில் தமிழ் மொழிக்கு கணினி உலகில் வளம் சேர்த்த மலேசியா மற்றும் தமிழக தமிழ் ஆர்வலர்களை மதிக்கிறோம்.
    தமிழ் வளரும் வேகத்தில் தமிழன் வளர்ந்தானா ? இவன் வளரவில்லை என்றால் இந்த உழைப்புகள் யாவும் என்னவாகும் என்ற போராட்ட காலத்தில் உலகத்தமிழர்கள் உள்ளோம்.
    தமிழில் பிழைக்க, அரசியல் நடத்த, தமிழ் வளர்ப்பதுபோல் தன்னை தமிழால் வளர்ந்து அரசியல் நடத்தும் திராவிட குழுமத்தில் பலர் உள்ளனர். ஆனால் தமிழன் தமிழால்,தமிழ் இனத்தால் வளர்ந்துள்ளானா? என்றால் பெரும்பாலான தமிழ் தலைவர்கள் அரசியல் நடத்த அவர்களைப்ப்போல் இவனும் தமிழை தற்காலிக
    தடமாக பாவித்து கரை சேர்ந்த நிலையில் துடுப்பை குப்பையில் வீசி விட்டு சுய வாழ்வியல் அகப்பையை நிரப்பிக்கொண்டர்வர்களதாம் அதிகம். இதனால் தமிழன் என்ற இனம் நோக்க்மின்றியும் கொள்கையின்றியும் உருப்படாமல் போனது நமது துர்ரதிஸ்டம் என்பேன்.
    தமிழை அரசியலுக்கு அனுபவித்து அரசியல் அரசு ரீதியில் தமிழுக்கு ஆபத்து வரும்போது ஒருத்தனையும் பார்க்க முடியவில்லை. மலேசியாவில் ஆளும் கட்சி தாய் கட்சி என்று ம இ கா இருந்தும் 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் தமிழுக்கு கிடைத்துள்ள அழிவை தட்டி கேற்க யாருமில்லா விளங்காததன தமிழ் அரசியல் வாதிகள் (வதிகள் ) குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கருவாடுகளாக போயினர்.
    அறுக்க மட்டாதன் கையில் அறுபதெட்டு அருவாள் என்பது போல அரசு அரசியல் ரீதியில் ஒரு பக்கம் தமிழ் மொழிக்கு அழிவை கண் முன்னே வைத்துகொண்டு நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்துவதின் பலன்தான் என்ன?
    கூடி களையும் கூட்டம் என்பது இந்த தமிழனுக்கா? அல்லது இதுபோன்ற மாநாடுகளில் புகுந்து தமிழை தமிழன் அல்லாதவன் சரிக்கும் சம்பரதாயம்தான் என்ன?
    தமிழ் நாட்டில் தமிழ் ஈழம் தமிழர்களை காட்டி பல கூட்டணிகள் அரசியல் வாழ்வாதாரம் நடத்தும் மோகத்தில் இங்கு நடக்கும் பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தமிழன் அல்லதா தமிழ் வழி தெலுங்கு வை கோவை தலைமைதாங்க வைத்துள்ள ஒரு தமிழனின் நிலையை ஆராய வேண்டிய காலம் வந்துள்ளது?
    கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழம் ஒப்பாரியில் தான் மதிய அமைச்சில் அமைச்சராக இருந்த போது கூட ஒரு மண்ணையும் நகர்த்த முடியாமல் பேச்சில் ஓலத்தையும் ஒப்பாரிகளையும் தூவி தமிழர் நாட்டு தமிழர்களை /தமிழை வைத்து தமிழனி பந்தாடும் ஒருத்தரை பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தலைமை தாங்க வைத்துள்ளது. என்ன அறிவிலித்தனம் என்று யோசிக்கிறோம்?
    தமிழ் எல்லார்க்கும் உரியது, வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்பதின் தமிழன் அல்லதான் வார்த்தை வசனத்தில் மயங்கி மக்கி இருக்கும் தமிழினத்தை ஏய்க்க மற்றொரு மாநாடா?
    திராவிடத்தால் தமிழர் நாடும் ,தமிழ் இனமும் சீரழிந்த கோலங்கள் போதும் இனியாவது திருந்துவோம் என்றவர் இன்று திராவிடன் தீயில் ஈயாய் சகொல்வது எனோ?
    கோயம்புத்தூரிலும் பிறகு கோலாலம்பூரிலும் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடுகளுக்கு தளமி ஏற்றார் பிறகு தமிழன் சீமானை வரவேற்று அரசியல் அலங்காரம் செய்ய ஒரு தமிழர் பணிப்படை விழா நடத்தி உலகத தமிழ் தலைவன் பட்டம் தந்தும் இதுதான் அடியா ? போதவில்லை …
    தமிழன் எங்கே செல்கிறான் என்பதை மாற்றி, தமிழ் தலைகள் எங்கே அடைக்கலம் ஆகிறது என்ற மாநாட்டை கூட்ட வேண்டிய காலத்தில் உள்ளோமா?
    உலக இனம் ரீதி மக்களுக்கு யாரவது ஒரு தலைவன் இருப்பான் ஏன் மூன்றாம் உலக நாட்டில் கூட தலைவர்கள் உருவாகிவிட்ட வேளையில் தமிழனுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாமல் போய் பொய்யாகி விட்டத்தின் தலை விதிதான் என்ன?
    மாநாட்டிற்கு நம்மை பிரதிபலிக்க ஒரு தலைமை இல்லாத இனமா?
    இனக்கொள்கை போராட்டத்தில்தான் இந்த உலகம் வாழ்கிறது.
    மகாத்மா காந்தியும் அதைதான் செய்தார்?
    வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் வரிசையில் நிற்காமல் தண்ணி கொண்டு அணைக்க வருபவன்தான் தலைவன்.
    உலகத தமிழன் வீடுகள் எல்லாம் இன /மொழி உரிமை எரிந்து புகைந்ததுக்கொண்டு வருகிறது. மாநாடுகள் இலக்கு நோக்கி
    இல்லாமல் தனி மனித லச்சங்களுக்கு அர்ச்சனை செய்வதை இனம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
    பொதுவில் இன முதலீட்டில் தனி மனித திமுருகளை என்று அடக்குகிறோமோ அன்றுதான் நல்ல அரசியல் நெறிகள் தோன்றும் .இது துரோகம் என்ற பயம் இருந்தால்தான் நமது இன, மொழி உரிமை தூய்மை பெரும். மொழியே இனத்தில் விழி. இங்கு இனத்தலைவர்களே அருவருடியாக இருந்தால் புதிய அரசியல் கடிவாளம் கட்டுவது நமது கடமை. அதற்கு இன விழிப்பும், மொழி தெளிவும் தெரிந்த தைரியமிக்க தலைவன் தேவை.

  2. Pon Rangan( Tamilavan)
    November 14, 2014 at 8:42 am

    என் விழிப்பின் சன்னதியில்
    தமிழனின் புலம்பல் ஓசை
    சவால்களை சந்திக்க எவனுமில்லை
    முளைப்பவன் எல்லாம்
    தனக்காக முட்டிக்கொள்கிறான்
    கேட்டால் அவன் அப்படி எங்கிறான் !
    தூங்கும் இன்றைய இளைஞர்கள்
    பதப்படுத்த மேடை இல்லை
    ஆக்கமும் ஊக்கமும் தந்தால்
    அதையும் குறை என்றான் மூத்தவன்
    தமிழன் புதைந்து விடலாகா
    7ம் அறிவில் சொன்னான்….
    உயிர் துடிப்பில் பேசியது போச்சி
    அவன் அப்பனும் அறம் அகரம் என்றான்
    நம்பிக்கையில் தீ போல
    வியர்வையில் வந்த சூடும்
    தணிந்த தடம் காணோம் என்
    காலத்தை வென்ற நிலையில்
    இளைஞனே நான் கூப்பிடும்
    சத்தம் கேக்கிறதா ? இளமை
    துள்ளும் வயதில் தமிழா உன்
    இனத்தை மறப்பது ஏன்?
    உன் பின்னால் வந்தவன் உன்னை
    கண்டு ஏறிப்போனான் நீ மட்டும் ஏன்
    இறக்கத்தில் நின்று ஏங்குகிறாய்
    அது முடிவான பாதாலமல்ல
    மெல்ல விழித்து எழுந்திடு.. சோம்பி
    அடிப்பட்ட பூனையல்ல நீ புலிதான்
    என்றால் மயக்கமா?
    நீ இறந்து போக வில்லை நறுங்கிவிட
    உலகத்தை உணர்வை இழந்தவனும் சாகட்டும்
    இனத்தை மறுப்பவனை நீ கொன்று விடு
    இதய தாக்கத்தை நீ தேக்கி வைக்காதே
    அது உன் தாய் மரணத்துக்கு சமம்
    மயக்கத்தில் மடியில் மதி மயங்காதே
    அது உன் உடன் உறவை அழிக்கும்
    அடியாத மாடு படியாது நீ என்ன அடி மாடா
    உனக்கு விதி மேல் அப்படி ஒரு பயம்
    விதி மதி சதி என்கிறாய்
    நீ பிறந்த மண்ணை உன் கருத்தில் கழுவு
    உன் ரத்த கரையை உன் விழியில் தெளித்திடு
    உன் இருளை அது மாற்றட்டும்
    நீ துடிப்பு மிக்க ஓடம்
    ஒளிமிக்க விளக்கு உன் தமிழன்
    ரத்தம் சூரியனே வெக்கப்பட வேண்டாமா?
    நீ உனக்குள் சூடேட்ற உன்னால் மட்டுமே முடியும்
    உலகத்தின் படைப்பை பார்
    உனக்கு மட்டும் இந்தியன்தான் எதிரி
    உன் முன்னோடிகள் தோற்ற விந்தை
    நீயும் அதில் மங்கிவிடாதே
    உன் உண்மை உணர்வை கிளறி
    கீதம் பாடு சோதனை சாலையில் சொர்க்கம்தேடு
    நீ அடிமையில்லை கொடியவனுமில்லை
    புதிய அகராதியை இனத்துக்கு புரட்டி போடு
    தமிழன் என்ற உச்சத்தில் ஊஞ்சலாட வா
    என்னோடு வா நீ தமிழன் இன வெறியன்
    என்றால் நான் வர வழி காட்டு
    இது என் புலம்பல் அல்ல பூபங்கம்
    தோற்று விட்ட காலங்கள் நம்மை
    தட்டி எழுப்பி உள்ளது
    எழு விழும் முன் எழு
    நீ நம் வெற்றிக்கு ஒரு விதி செய்
    நானும் வருகிறேன் அதை உரக்கசெய்வோம்!!!
    – பொன் ரங்கன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...