இணையத்தின்வழி கல்வி, கலாச்சாரம், பண்பாடு போன்று இன்னும் இதர பல துறைசார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என அனைத்தும் உலகளாவிய அளவில் பொதுமைபடுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற சாத்தியத்தை அனைவரும் எதிர்பார்க்கவே செய்கின்றனர். ஆனால், தற்போதுள்ள நமது சட்டங்களும் சமூக அமைப்பும் இதனை சற்றும் அனுமதிக்காதபடி இருப்பதுதான் தற்போதைய நிதர்சனமாகும். தொடக்கத்தில் பதிப்புரிமை சட்டத்தில் (Copyright) அதிக சிக்கல்களும் ஒழுங்குமீறல்களும் இல்லாதிருந்ததாகச் சொல்லப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, பரவலான இணைய பயன்பாடு என உலகம் கணினிமயமாக மாறத் தொடங்கிய காலம் முதல் (நகல் எடுத்தல்-copy, வேறொரு பதிவில் ஒட்டுதல்-paste, edit செய்தல், மற்றும் வலைதளங்களில் பதிவேற்றம் செய்தல் post to the Web என பதிப்புரிமை சட்டத்தை (Copyright) மீறும்படியான செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இவை எங்கு நடக்கின்றன என்பதனைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குள் இன்னும் பல ஆயிரம் Copyright சட்டமீறல்கள் நடந்துவிடுகின்றன.
இந்நிலையில், பதிப்புரிமை சட்டத்தை ஓரளவு இலகுவாக்குவதன்வழி அல்லது அதற்கு மாற்றான (தகவல் பயன்பாட்டை எளிமைபடுத்தும்) வழியைக் கண்டடைய வேண்டியத் தேவை ஏற்பட்டது. படைப்புகளின், தகவல்களின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிக்க, பொதுபயன்பாட்டுக்கு இலவசமாக்க, பயனிட்டாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் சரிசமமான சழுகைகளை வழங்க (copyright சட்டத்திற்கு உட்பட்டு) ஏதாவது ஒரு வழிமுறை உருவாக்கபட வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவ்வகையில், மேற்கூறிய அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டதே பகிர் உரிமம் (Creative Commons) என்பதாகும்.
இது பதிப்புரிமையின் (copy right) ஒரு பகுதியாகவே பார்க்கப் படுகின்றது. அடிப்படையில் காப்புரிமை. பதிப்புரிமையின் செயல்பாடுகள் என்ன என்பதை மீள்பார்வை செய்து கொள்வதன்வழி பகிர் உரிமம் (Creative Commons) எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஓரளவு தெரிந்துக் கொள்ளலாம்.
பதிப்புரிமை (copyright) – படைப்பாளர் /கண்டுபிடிப்பாளர்/ வடிவமைப்பாளர் ஆகியோர் தங்களது சிந்தனையில்/திட்டத்தில் உருவான படைப்பை/கண்டுபிடிப்பை/ உருவாக்கத்தை/வடிவமைப்பை தான் பயன்படுத்த, அறிவிக்க, பெருக்கம் செய்ய அல்லது பிறர் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க கொடுக்கப்பட்டிருக்கும் ஒருவகை உரிமையாகும்.
பொதுவாகவே பதிப்புரிமை எனப்படுவது படைப்பாளர்களுக்கு சழுகைகள் வழங்கவதாகவும், படைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் வடிவமைக்கப் பட்டதாகும். அதாவது பதிப்புரிமை சட்டமானது ஒருவரின் படைப்பை நகல் (reprint/ photocopy) எடுக்க, விநியோகிக்க (distribute), புதியதாக ஒன்றை அதனுள் சேர்க்க (remix), அதிலிருந்து லாபம் பார்க்க (profit) தடை விதிக்கிறது. அவ்வகையில் இப்பதிப்புரிமை சட்டம் பயனிட்டாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை.
Digital World என்றழைக்கப்படும் இக்கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாவிதமான தொடர்பு சாதனங்களின் வழியாகவும் கட்டற்று பரவிக்கொண்டே இருக்கின்றன. இதில், பதிப்புரிமை போன்ற இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள் தகவல் பயனிட்டாளர்களை வழிந்து குற்றச் செயல்களை மேற்கொள்வதற்கான சாத்தியங்களை உறுவாக்கிக் கொடுக்கின்றன. பயனிட்டாளர்களின் தேவைகளையும் படைப்பாளர்களின் உரிமையையும் இணைந்து பாதுகாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதே பகிர் உரிமாகும். தற்போதையச் சூழலில் பகிர் உரிமத்தின் தேவை மேலோங்கியுள்ளதை அதன் பயனீட்டு அடிப்படையில் காண முடிகின்றது. தொடர்ந்து, பகிர் உரிமம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விரிவாக பார்க்கலாம்.
பகிர் உரிமம் (Creative Commons)
இப்பகிர் உரிம முறை 2001 ஆண்டு (Center for the Public Domain) எனும் மையத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. கல்வித் துறை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சட்ட அறிஞர்கள், முதலிட்டாளர்கள், தொழி முனைவர்கள் மற்றும் சில முக்கியத் தலவர்களின் தலைமையில் இதன் உருவாக்கம் அமையப்பெற்றது.
2002 டிசம்பரில் இதன் முதல் பதிப்புரிமை உரிமங்கள் (copyright licenses) பொதுமக்களின் இலவச பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டது. இவ்வுரிம வடிவமைப்பு தொடர்ந்து அதனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை GNU GPL என்றழைக்கப்படும் மென்பொருள் அறக்கட்டளையின் கவனிப்பின்கீழ் செயல்படுத்தப்பட்டன. தகவல்களையும், தரவுகளையும் சுதந்திரமாகப் பயன்படுத்த (சில அடிப்படை நிபந்தனைகளை மட்டும் பின்பற்றி) இவ்வுரிமம் வகைசெய்வதாக அமைந்தது.
இந்த பகிர் உரிம முறை தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அதிக வரவேற்புகளைப் பெறத் தொடங்கியது. அதனைத் தொடந்து உரிமங்கள் மேலும் பயனிட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மேம்படுத்தப்படப் பட்டன. இன்றைய சூழலில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட இணை அமைப்புகள் ஒன்றிணைந்து 70 அதிகார எல்லைகளின்கீழ் (jurisdictions) பகிர் உரிம நடவடிக்கையினை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
பதிப்புரிமை உரிமங்கள் (Copyright Licenses)
முன்பே பதிப்புரிமை என்பது படைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமுறை என்பதைப் பார்த்தோம். அப்படியிருக்க பகிர் உரிமம் (Creative Commons)பதிப்புரிமை உரிமங்கள் எனும் பெயரில் புதியதாக இன்னும் பல உரிமங்களை அமல்படுத்தி சிக்கலை உருவாக்க வேண்டுமென கேள்விகள் எழலாம். மலேசியாவில் நமது படைப்புகளுக்கு copyright எடுத்துவைத்துக் கொள்வது என்பது எவ்வாறு நிகழ்கிறது என்பதை முதலில் காண்போம்.
பதிப்புரிமையை முறையாக பதிவு செய்யும் முறைமை மலேசியாவில் இல்லை என்பதை நாம் தெளிவில்கொள்ள வேண்டும். அதாவது ஒரு படைப்பு முழுமைப்பெற்ற பிறகு அப்படைப்பை எந்த அரசாங்க அலுவலகங்கத்திற்கும் கொண்டு சென்று பதிப்புரிமை பெற வேண்டிய கட்டாயங்கள் இதுவரை நடப்பில் இல்லை. மலேசிய பதிப்புரிமை சட்டம் 1987லின்படி குறிப்பிடத்தக்க சில தகுதிகளைப் பெற்றிருக்கும் நிலையில் தானாகவே ஒரு படைப்பு பதிப்புரிமையைப் பெற்றுவிடுகின்றது.
இருப்பினும், படைப்பாளருடைய நலன் கருதி படைப்பில் copyright முத்திரையிட்டு அதன் உரிமையானவரின் பெயரை குறிப்பிடுவது அவசியமாகும். மேலும் எழுத்துப்பூர்வமான சாட்சிகள் வேண்டுமெனில் Akta Akuan Sumpah 1960 என்ற சட்டத்தின்கீழ் சத்தியப் பிரமான கடிதத்தைப் பெற்றுக்கொள்வதும் கூடுதல் பாதுகாப்பாக அமையும்.
(விஜயலட்சுமி, ம., 2014, ஜூன் 1.)
ஆக, மலேசியாவை பொருத்தமட்டில் ஒரு படைப்பு பதிப்புரிமை பெற்றுள்ளது என்பதை அடையாளப்படுத்த copyright அல்லது © எனும் முத்திரையையோ அவசியம் பயன்படுத்தவேண்டியுள்ளது. அவ்வாறு பதிப்புரிமை பெற்றுவிட்ட படைப்பு எவ்வகையிலெல்லாம் பிறரால் பயன்படுத்தலாம், பயன்படுத்தக் கூடாது எனும் தெளிவினை படைப்பாளர் பெற்றிருப்பதில்லை.
ஆனால், பகிர் உரிமத்தின்கீழ் Creative Common வடிவமைக்கப்பட்டிருக்கும் பதிப்புரிமை உரிமங்கள் மிகத் தெளிவான விளக்கங்களைக் கொண்டவை. இதனை படைப்பாளர்களே தெரிவு செய்கின்றனர். மேலும், பதிப்புரிமையின் (copyright) தாரக மந்திரமாக இதுவரை விளங்கிவந்த “all rights reserved” என்பதுபோல் இல்லாமல் படைப்பாளர், பயனிட்டாளர் எனும் இரு தரப்புகளுக்கும் சமநிலையான உரிமைகளை வழங்கும்படி Creative Commons-இன் உடைய பதிப்புரிமை உரிமங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பதிப்புரிமை உரிமங்கள் (copyright Licenses) தேர்வு செய்தல்
அடிப்படையில் இப்பதிப்புரிமை உரிமங்கள் அனைத்தும் சில முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டவையாகும். அனைத்துவகை உரிமங்களும் முதலில் படைப்பாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. படைப்பாளர்களை உரிமதாரர்களாக்கி (licensor) பயனிட்டாளர்கள் அப்படைப்புகளைப் பயன்படுத்த, படியெடுக்க, பொதுபயன்பாட்டுக்குப் பரப்ப அனுமதி வழங்கின்றது. இவையனைத்தும் வியாபார, லாப நோக்கமில்லாததை பயனிட்டாளர்கள் உறுதி செய்துகொள்ளவதே இதன் மிக அடிப்படையான நோக்கமாகும். அனைத்து பதிப்புரிமை உரிமங்களும் உரிமதாரருக்கு (படைப்பாளர்) அங்கிகாரத்தை வழங்குவதாக உள்ளது. இவ்வுரிமங்களில் மாற்றங்கள் ஏற்படும் சூழலில் மட்டுமே அதன் பயன்பாட்டில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. உரிமதாரர்கள் மேலும் கூடுதலான அனுமதிகளை தரவிரும்பும் நிலையில் அதற்கான வசதிகளும் copyright licensesகளில் சாத்தியப்படுகின்றன.
Creative Common நிறுவனம் ஆறு விதமான பதிப்புரிமை உரிமங்களை (copyright licenses) படைப்பாளர்களுக்கு வழங்கின்றது. அவை முறையே CC BY, Attribution-ShareAlike (CC BY-SA), Attribution-NoDerivs (CC BY-ND), Attribution-NonCommercial (CC BY-NC), Attribution-NonCommercial-ShareAlike (CC BY-NC-SA), மற்றும் Attribution-NonCommercial-NoDerivs (CC BY-NC-ND) ஆகும். இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு ஏற்ற வகையிலான பதிப்புரிமை உரிமங்களை (copyright licenses) படைப்பாளர்களுக்கு வழங்கின்றன.
Creative Commons நிறுவனம் வடிவமைத்திருக்கும் இவ்வகை உரிமங்கள் தொடர்பான எந்தவித சட்ட ஆலோசனைகளை வழங்கும் கடப்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை என்பதனையும் நாம் தெளிவில் கொள்ள வேண்டும். அவ்வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்புகள் அனைத்தும் படைப்பாளர்களைச் சார்ந்ததாகும்.
பகிர் உரிமையின் (Creative Commons) பயன்கள்
- தகவல் பகிர்வு கலாச்சாரத்தை ஊக்குவித்தல்
ஒரு சமூகத்தில் தகவல்களைப் பகிருதல், மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல் போன்ற காலாச்சரத்தை ஊக்குவிக்கும் தளமாக அமைகின்றது. பயனிட்டாளருக்கும் படைப்பாளருக்கும் இடையே புதுதொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்க உதவுகின்றது.
- உலக அங்கிகாரம்
பகிர் உரிமையின் கருத்தாக்கம் அனைவருக்கும் எளிமையாகவும் பயனளிக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் படைப்புகள் மிகச் சுலபமாக இணையத்தினோடே பொதுபார்வைக்குச் சென்றுவிடுகிறது.
- சர்வதேச அளவிலான பயன்பாடு
பகிர் உரிமை பொதுவான (உலக அரங்கில் பயன்படுத்தும்படி) பதிப்புரிமை உரிமங்களை (copyright licenses) வைத்திருந்தாலும் அந்தந்த நாடுகளின் நடைமுறைக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்த; மாற்றியமைக்க (அசல் தன்மையிலிருந்து மாறாமல்) வசதிகள் உள்ளன.
- எளிமையான பதிப்புரிமை உரிமங்கள் (copyright licenses)
பயனிட்டாளர்கள் எவ்வழிகளில், எந்த கட்டுப்பாட்டுக்குள் தங்கள் படைப்புகளை, அறிவுசார் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பதை எளிமையான முறையில் தேர்வு செய்ய ஆறு விதமான பதிப்புரிமை உரிமங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எளியவர்களும் புரிந்து கொள்ளும் அளவில் மிக சுலபாக அவ்வுரிமங்கள் அமையப்பெற்றுள்ளன. இது பயனிட்டாளர்களுக்கு உதவுவதோடு படைப்பாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வண்ணம் அமைகிறது.
- படைப்புகளை சுலபமாகக் கண்டடையலாம்
கட்டற்ற பயன்பாட்டுக்குறிய படைப்புகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற பகிர் உரிமம் (Creative Commons) வகை செய்கிறது. Google, Yahoo! போன்ற இன்னும் பல தேடுபொறிகளைப் பயன்படுத்தி பகிர் உரிமம் (Creative Commons) பெற்றுள்ள படைப்புகளைத் தனியாக தேட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
- நெகிழ்வுத் தன்மைமிக்க பயன்பாடு
வணிகத் தேவைக்கு உட்பட்டு, உட்படாமல், மீள்பதிப்பு செய்ய அனுமதி வழங்குதல், வழங்காமல் விடுதல் பலவகையான தேர்வு வகைகளை பதிப்புரிமை உரிமங்கள் (copyright licenses) உரிமதாரகளுக்கு (படைப்பாளர்களுக்கு) கொடுக்கின்றன. மேலும் பயனிட்டாளர்கள் ஒரு தரவை எந்த உரிமத்தின்கீழ் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்கிற விருப்பத்தைச் சொல்லவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
மலேசியாவில் பகிர் உரிமை (Creative Commons) தொடர்பான பதிப்புரிமை உரிமங்கள் (Copyright Licenses)
மலேசியாவில் பகிர் உரிமைக்கு (Creative Commons) இணைநிறுவனமாக இருந்து அதன் செயல்பாடுகளை வழிநடத்திவரும் நிறுவனம் MdeC என்றழைக்கப்படும் Multimedia Development Corporation ஆகும். இவ்விணை நிறுவனம் பேராசிரியர் லாரன்ஸ் Professor Lawrence Lessig என்பவறால் மலேசியாவில் தொடங்கப்பட்டது. மலேசியப் பதிப்புரிமை உரிமங்களை (copyright licenses) பின்வறுமாறு காணலாம்.
- CC BY 2.5 MY
பகிர்வு – எல்லா வடிவத்திலும் (format) நகல் எடுக்க, பரப்ப அனுமதி
தழுவல் – படைப்பை மறு உருவாக்கம், மாற்றம், கலக்க அனுமதி
இவ்வுரிமத்தின்கீழுள்ள படைப்புகளை பயன்படுத்துபவர்கள் படைப்பாளர்களுக்கான அங்கிகாரத்தை தெரிவிக்க வேண்டும்; உரிமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும்; மற்றும் படைப்பில் மாற்றங்கள் செய்திருப்பின் குறிப்பிட வேண்டும். (பயனிட்டாளர்கள் படைப்பில் மாற்றங்கள் அவசியமென்றால் மட்டுமே இணைக்க வேண்டும்; தவிர மாற்றங்கள் செய்ததனால் தங்களுக்கும் பதிப்புரிமைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளையெல்லாம் விதிக்கக்கூடாது). பார்க்க: http://creativecommons.org/licenses/by/2.5/my/
- CC BY-NC 2.5 MY
பகிர்வு – எல்லா வடிவத்திலும் (format) நகல் எடுக்க, பரப்ப அனுமதி
தழுவல் – படைப்பை மறு உருவாக்கம், மாற்றம், கலக்க அனுமதி
கூறுகள்–
இவ்வுரிமத்தின்கீழுள்ள படைப்புகளை பயன்படுத்துபவர்கள் படைப்பாளர்களுக்கான அங்கிகாரத்தை தெரிவிக்க வேண்டும்; உரிமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும்; மற்றும் படைப்பில் மாற்றங்கள் செய்திருப்பின் குறிப்பிட வேண்டும். (பயனிட்டாளர்கள் படைப்பில் மாற்றங்கள் அவசியமென்றால் மட்டுமே இணைக்க வேண்டும்; தவிர மாற்றங்கள் செய்ததனால் தங்களுக்கும் பதிப்புரிமைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளையெல்லாம் விதிக்கக்கூடாது).
வணிக நோக்கமில்லாமை–
வணிக நோக்கத்திற்காக இப்படைப்பை/பொருளை பயன்படுத்தக் கூடாது.
பார்க்க: http://creativecommons.org/licenses/by-nc/2.5/my/
- CC BY-NC-ND 2.5 MY
பகிர்வு – எல்லா வடிவத்திலும் (format) நகல் எடுக்க, பரப்ப அனுமதி
கூறுகள்–
இவ்வுரிமத்தின்கீழுள்ள படைப்புகளை பயன்படுத்துபவர்கள் படைப்பாளர்களுக்கான அங்கிகாரத்தை தெரிவிக்க வேண்டும்; உரிமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும்; மற்றும் படைப்பில் மாற்றங்கள் செய்திருப்பின் குறிப்பிட வேண்டும். (பயனிட்டாளர்கள் படைப்பில் மாற்றங்கள் அவசியமென்றால் மட்டுமே இணைக்க வேண்டும்; தவிர மாற்றங்கள் செய்ததனால் தங்களுக்கும் பதிப்புரிமைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளையெல்லாம் விதிக்கக்கூடாது).
வணிக நோக்கமில்லாமை–
வணிக நோக்கத்திற்காக இப்படைப்பை/பொருளை பயன்படுத்தக் கூடாது.
மீள்பதிப்பு-
படைப்பின்/பொருளின்மீது மாற்றங்கள், மறு உருவாக்கம், கலப்பு வேலைகள் செய்திருப்பின் அதனை பரப்புவதற்க்கும், விநியோக்கிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
பார்க்க: http://creativecommons.org/licenses/by-nc-nd/2.5/my/
- CC BY-NC-SA 2.5 MY
பகிர்வு – எல்லா வடிவத்திலும் (format) நகல் எடுக்க, பரப்ப அனுமதி
தழுவல் – படைப்பை மறு உருவாக்கம், மாற்றம், கலக்க அனுமதி
கூறுகள்–
இவ்வுரிமத்தின்கீழுள்ள படைப்புகளை பயன்படுத்துபவர்கள் படைப்பாளர்களுக்கான அங்கிகாரத்தை தெரிவிக்க வேண்டும்; உரிமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும்; மற்றும் படைப்பில் மாற்றங்கள் செய்திருப்பின் குறிப்பிட வேண்டும். (பயனிட்டாளர்கள் படைப்பில் மாற்றங்கள் அவசியமென்றால் மட்டுமே இணைக்க வேண்டும்; தவிர மாற்றங்கள் செய்ததனால் தங்களுக்கும் பதிப்புரிமைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளையெல்லாம் விதிக்கக்கூடாது).
வணிக நோக்கமில்லாமை–
வணிக நோக்கத்திற்காக இப்படைப்பை/பொருளை பயன்படுத்தக் கூடாது.
ஓறேமாதிரியான பகிர்வு-
படைப்பின்/பொருளின்மீது மாற்றங்கள், மறு உருவாக்கம், கலப்பு வேலைகள் செய்திருப்பின் அதனை பரப்புவதற்க்கும், விநியோக்கிப்பதற்கும் படைப்பின் அசலான பதிப்புரிமை உரிமத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பார்க்க: http://creativecommons.org/licenses/by-nc-sa/2.5/my/
- CC BY-ND 2.5 MY
பகிர்வு – எல்லா வடிவத்திலும் (format) நகல் எடுக்க, பரப்ப, வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்த அனுமதி
கூறுகள்–
இவ்வுரிமத்தின்கீழுள்ள படைப்புகளை பயன்படுத்துபவர்கள் படைப்பாளர்களுக்கான அங்கிகாரத்தை தெரிவிக்க வேண்டும்; உரிமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும்; மற்றும் படைப்பில் மாற்றங்கள் செய்திருப்பின் குறிப்பிட வேண்டும். (பயனிட்டாளர்கள் படைப்பில் மாற்றங்கள் அவசியமென்றால் மட்டுமே இணைக்க வேண்டும்; தவிர மாற்றங்கள் செய்ததனால் தங்களுக்கும் பதிப்புரிமைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளையெல்லாம் விதிக்கக்கூடாது).
மீள்பதிப்பு-
படைப்பின்/பொருளின்மீது மாற்றங்கள், மறு உருவாக்கம், கலப்பு வேலைகள் செய்திருப்பின் அதனை பரப்புவதற்கும், விநியோக்கிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
பார்க்க: http://creativecommons.org/licenses/by-nd/2.5/my/
- CC BY-NC 2.5 MY
பகிர்வு – எல்லா வடிவத்திலும் (format) நகல் எடுக்க, பரப்ப அனுமதி
தழுவல் – படைப்பை மறு உருவாக்கம், மாற்றம், கலக்க வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்த அனுமதி
கூறுகள்–
இவ்வுரிமத்தின்கீழுள்ள படைப்புகளை பயன்படுத்துபவர்கள் படைப்பாளர்களுக்கான அங்கிகாரத்தை தெரிவிக்க வேண்டும்; உரிமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும்; மற்றும் படைப்பில் மாற்றங்கள் செய்திருப்பின் குறிப்பிட வேண்டும். (பயனிட்டாளர்கள் படைப்பில் மாற்றங்கள் அவசியமென்றால் மட்டுமே இணைக்க வேண்டும்; தவிர மாற்றங்கள் செய்ததனால் தங்களுக்கும் பதிப்புரிமைக்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளையெல்லாம் விதிக்கக்கூடாது).
ஓரேமாதிரியான பகிர்வு-
படைப்பின்/பொருளின்மீது மாற்றங்கள், மறு உருவாக்கம், கலப்பு வேலைகள் செய்திருப்பின் அதனை பரப்புவதற்க்கும், விநியோக்கிப்பதற்கும் படைப்பின் அசலான பதிப்புரிமை உரிமத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பார்க்க: http://creativecommons.org/licenses/by-sa/2.5/my/
பயனிட்டாளர்கள் பகிர் உரிமத்தைக் கொண்ட எவ்வகையான படைப்புகளையும் தங்களின் ஆய்வு நோக்கங்களுக்காகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். படைப்பு எவ்வகை உரிமத்தின்கீழ் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு அதனைப் பின்பற்றி படைப்புகளை முழுமையாகப் பயன்படுத்தலாம். வழங்கப்பட்டிருக்கும் ஆறு வகையான உரிமங்களில் இரண்டு வகை உரிமங்கள் மாற்றங்கள், மறு உருவாக்கம், கலப்பு வேலைகள் செய்வதை தடைவிதிப்பவையாக இருக்கின்றன (BY-ND, BY-NC-ND); மூன்று உரிமங்கள் வணிக அல்லது வியாபார நோக்கத்தை தவிர்க்கின்றன (BY-NC, BY-NC-ND, BY-NC-SA), மேலும் இரண்டு உரிமங்கள் மாற்றங்கள், மறு உருவாக்கம், கலப்பு வேலைகளை அனுமதித்தாலும் அவை மீண்டும் படைப்பின் அசலான உரிமத்தின்கீழ் பகிரப்பட கோறுகின்றன (BY-SA, BY-NC-SA). இவையெல்லாம் ஒருபுறமிருக்க Creative Commonsசினுடைய அனைத்து உரிமங்களுமே படைப்பாளர் அங்கீகரிப்படுவதை வழியுறுத்துகின்றன.
Power is gained by sharing knowledge not hoarding it என்பது ஆங்கில முதுமொழி. அறிவுப் பகிர்வு பெருகப் பெருக புதுப்புது கருத்தாக்கங்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் கதவுகள் அகல விரிக்கப்படுகின்றன. கற்றதையும், கண்டுபிடித்ததையும் பதுக்குவது உலகின் அறிவு கொடைக்கு நாம் காட்டுகின்ற கஞ்சத்தனமாகிவிடும். மேலும், தகவல்கள் நிரம்பி வழியும் இணையத்தில் நம்முடைய ஆக்கங்களை நம்முடைய அகப்பக்கங்களிலும், வலைத்தளங்களிலும் மட்டுமே பகிர்தலும்கூட ஒருவகையில் போதாமையையே காட்டுகின்றது. பரந்த வெளியில் பரதரப்பட்ட வாசிப்புக்கும், பகிர்தலுக்கும், விவாதங்களுக்கும் நம்முடைய உருவாக்கம் செல்லவேண்டுமெனில் Creative Commons போன்ற இலவச சேவைகளை பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
துணைநூல் பட்டியல்