
“அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்பா செத்திருக்க மாட்டாரு!” என்றான் அரசு. அப்பாவின் படையலுக்கு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு சென்றபின்னர் வீடு மீண்டும் வெறுமையைப் போர்த்தத் தொடங்கியிருந்தபோது எழுந்த அவன் குரல் மாலதியைத் திடுக்கிட வைத்தது. அண்ணன் என்ன சொல்லவருகிறான் என்பதையும் தன் காதில் விழுந்த சொற்களை நம்பலாமா என்றும் யோசித்து குழம்பிவிட்டாள்.