வல்லினம் இலக்கியக் குழு வருடம்தோறும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் மிக உற்சாகமாக ஏற்பாடாகி வருகிறது. ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனத் தலைப்பின் கீழ் மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்களை வெளியிடுவதோடு அவர்களின் தேர்ந்தெடுத்த இரு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து உலக இலக்கிய ஆர்வளர்களின் பார்வைக்கும் எடுத்துச்செல்லும் திட்டமும் இவ்வருட கலை இலக்கிய விழாவில் சாத்தியப்பட்டுள்ளது. அதோடு இப்படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விரிவான விமர்சனங்கள் அடங்கிய நூலும் கலை இலக்கிய விழா 8ல் வெளியீடு காண்கிறது.
மலேசிய மூத்த இலக்கிய வாதிகளுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இக்கலை இலக்கிய விழாவிற்கு தலையேற்க மலேசியாவின் மூத்த இலக்கியவாதிகளான இலக்கியக் குரிசில் மா. இராமையா , எழுத்தாளர் அ.ரெங்கசாமி கலந்துகொள்ளும் அதே வேளையில் சிங்கையின் மூத்தப்படைப்பாளியான இராம.கண்ணபிரான் அவர்களும் இக்கலை இலக்கிய விழாவில் இணைவது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த உற்சாகத்திற்குக் கூடுதல் முத்தாய்ப்பாக சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் கலந்துகொள்கிறார். சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கும் அவரது சிறப்புரை 8ஆவது கலை இலக்கிய விழாவை மேலும் சிறப்புற செய்யும் என்பது திண்ணம்.
இந்தக் கலை இலக்கிய விழாவில் சிறப்பு அங்கமாக ‘வல்லினம் சிறுகதை போட்டிக்கான‘ பரிசளிப்பும் நடைபெறும். பல மூத்தப்படைப்பாளிகளும் தமிழக சிறப்பு விருந்தினரும் உள்ள அரங்கில் வெற்றிபெரும் எழுத்தாளருக்கு சிறப்பு செய்யப்படும். இன்னும் கதைகளை அனுப்பாவதவர்கள் உடனடியாக அனுப்பத்தொடங்கலாம். விபரம் பெற இங்கே அழுத்தவும்
நிகழ்ச்சியின் விபரங்கள் :
நாள் : 13.11.2016 (ஞாயிறு)
நேரம் : பிற்பகல் : 2.00 – 5.30
இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)
வாசகர்களிடம் எழுத்தாளர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். வல்லினம் கடந்த காலங்கள் போலவே அரசியல்வாதிகளின் தயவு வேண்டி நிற்காமல் எங்களுக்கான தளத்தை சுய முயற்சியால் அமைத்துக்கொள்ளவே முயல்கிறோம். ஒவ்வொரு வருடம் போலவே இவ்வருடமும் 50 ரிங்கிட்டுக்கான கார்ட் விற்பனை செய்யப்படும். 50 ரிங்கிட் கொடுத்து கார்ட் வாங்கும் ஒருவருக்கு நான்கு எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் அடங்கிய இருவட்டு (DVD), மொழிப்பெயர்ப்பு நூல் மற்றும் விமர்சன நூல் ஆகியவை வழங்கப்படும். கார்ட்டுகளை கீழ்க்கண்ட வல்லினம் நண்பர்களை அணுகிப்பெற்றுக்கொள்ளலாம்.
தயாஜி : 0164734794
ம.நவீன் : 016394522 (சிலாங்கூர் /கோலாலம்பூர்)
அ.பாண்டியன் : 013669644 (பினாங்கு/ கெடா)
கங்காதுரை : 0124405112 (ஈப்போ)