கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் ‘வல்லினம்’ தனது 8ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்கென சிறுகதை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை மலேசியச் சூழலில் சிறுகதை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகைகளைக் காட்டிலும் அதிகமாக வழங்கி எழுத்தாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிறந்த 10 சிறுகதைகள் மலேசிய நீதிபதிகள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் சிறுகதைகள் தேர்வுபெறும்.
போட்டியின் பரிசுத்தொகை
முதல் பரிசு RM 3,000.00
இரண்டாம் பரிசு RM 2,000.00
மூன்றாம் பரிசு RM 1,000.00
ஏழு ஊக்கப் பரிசுகள் ஒருவருக்கு RM100.00 x 7
போட்டியின் விதிமுறைகள் பின்வருமாறு:
- தலைப்பு பொதுவானது.
- வயது வரம்பில்லை.
- சிறுகதைகளுக்குப் பக்கவரையறை இல்லை.
- சிறுகதைகள் சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே அச்சில் வெளிவந்ததாகவோ இணையத்தில் உள்ளதாகவோ தழுவலாகவோ, மொழிபெயர்ப்பாகவோ இருத்தல்கூடாது.
- சிறுகதைகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டோ அல்லது கையெழுத்துப்பிரதியாகவோ அனுப்பலாம்.
- வல்லினம் ஆசிரியர் குழுவினரும் அவர்தம் குடும்பத்தாரும் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
- ஓர் எழுத்தாளர் எத்தனை படைப்புகளையும் அனுப்பலாம். ஆனால் ஒரு படைப்பாளி ஒரு பரிசுக்கு மட்டுமே தகுதியானவராவார்.
- படைப்பைத் தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம்.
- சிறுகதை எழுத்தாளரின் முழுவிபரங்கள் (அடையாள அட்டையில் உள்ளது போல பெயர், அடையாள அட்டை எண், தற்போதைய வீட்டு முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண்) படைப்புடன் தனித்தாளில் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
- போட்டியில் மலேசியக்குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே பங்கெடுக்க இயலும்.
- எழுதப்பட்ட சிறுகதை, ‘வல்லினம் சிறுகதை’ போட்டிக்காகத் தானே சுயமாக எழுதியது என்று போட்டியாளர்களின் கையொப்பமிடப்பட்ட உறுதிக்கடிதம் ஒன்றை உடன் இணைத்து அனுப்பவேண்டும்.
- அனுப்பப்பட்ட படைப்புகள் வல்லினம் அகப்பக்கத்தில் இடம்பெறவும், நூலாக்கம் செய்யவும் வல்லினம் முழுஉரிமை பெற்றிருக்கும். வல்லினத்தின் அனுமதியின்றி மீள்பிரசுரம் செய்யக்கூடாது.
- போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எழுத்தாளர்கள் போட்டி ஏற்பாட்டாளர்களை எவ்வகையிலும் தொடர்புக்கொள்ளக்கூடாது.
- சிறுகதையை அனுப்ப வேண்டிய இறுதிநாள் 15 செப்டம்பர் 2016. இத்திகதிக்குப்பிறகு அனுப்பப்படும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- இப்போட்டிக்கான பரிசுகள் வல்லினத்தின் 8ஆவது கலை இலக்கிய விழாவில் வழங்கப்படும்
- நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
சிறுகதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி : vallinamsirugathai2016@gmail.com
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
வல்லினம் சிறுகதை
3 Jalan sg 7/8,
Taman Sri Gombak,
68100 Batu Caves, Selangor.
தொடர்பு எண் : 0163194522 (ம.நவீன்)
0136696944 (அ.பாண்டியன்)
0124405112 (கங்காதுரை)
ஆக்ககரமான நல்ல திட்டம்! வாழ்த்துகள்!
போட்டியில் மலேசியக்குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே பங்கெடுக்க இயலும். இதை தவிர்த்திருந்தால் எங்களைப் போன்றோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா
அட போங்கப்பா இதுக்குப்போய் ஏன் உல்களாவிய வலை விளம்பரம்?
சிங்கப்பூரில் உள்ள எழுத்தாளர்கள், இலங்கை எழுத்தாளர்களும் பங்குபற்றும் வண்ணம் போட்டியை வைத்திருந்தால் நிறையப்படைப்புக்கள் போட்டிக்கு வந்துசேர வாய்ப்பிருந்திருக்கும். இறுதித்தீர்ப்பை இந்திய எழுத்தாளர்களே வழங்குவார்கள் என்பது மலேஷியாவில் தரமான இலக்கியர்கள் இல்லை என்பதை ஒத்துக்கொள்வதாகாதா…………….?
எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிறந்த 10 சிறுகதைகள் மலேசிய நீதிபதிகள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்// சிறந்த படைப்பாளி கண்டெடுக்கப்படுவார் என்பது உறுதி.
இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தமிழகத்திலுள்ள “நீதிபதிகளுக்கு” அனுப்பிவைக்கப்படும் என்பதுதான் அறிவித்தலிலேயே சொல்லியாச்சே? இந்த சல்லாரி இப்போது இங்கு எதற்குன்னேன்?
வல்லினத்தின் இத்தகைய தலையாய முயற்ச்சிக்கு சிலர் இங்கே பதியும் கருத்துக்கள் வருத்தமளிக்கிறது.
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்,
வலைத்தளம் இது தானடா!!