வல்லினம் கடந்த பத்து ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளது. அவற்றில் சில பரவலான வாசிப்புக்குச் சென்றுள்ளன. சிறிய விமர்சன கூட்டங்கள் மூலம் நூல்களின் தரத்தைப் பாராபட்சம் இன்றி விமர்சனம் செய்யும் அங்கங்களையும் உருவாக்கி நூல்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வல்லினம் பதிப்பில் வந்த நூல்களை பரந்த வாசிப்புக்குக் கொண்டுச்செல்லவும் தரமான ஆக்கங்களை பொதுவாசகர் பரப்பில் கவனப்படுத்தவும் இப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது. அதே சமயம் படைப்பிலக்கியங்களை விமர்சனத் தன்மையுடன் அணுகும் வாசகர்களையும் உருவாக்குவதும் அவ்வாறு அணுக ஊக்குவிப்பதும் இப்போட்டியின் தலையாய நோக்கம்.
ஆறு நூல்கள் மூன்று பரிசுகள்.
2018இல் வல்லினம் பதிப்பித்த 10 நூல்களில் 6 நூல்களை இந்த விமர்சனக் கட்டுரைப்போட்டிக்கு ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துள்ளது. ஏறக்குறைய 100 பக்கம் முதல் 200 பக்கத்தில் பதிப்பாகியுள்ள 6 நூல்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளோம்.
பிரிவு | நூல் |
சிறுகதை தொகுப்பு | 1.போயாக்
2. சண்முகசிவா சிறுகதைகள்
|
குறுநாவல் | 1.மிச்சமிருப்பவர்கள்
2. ரிங்கிட்
|
பொது | 1. கே.எஸ்மணியம் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)
2. ஊதா நிற தேவதைகள் (சினிமா விமர்சனம்) |
இந்த நூல்களுக்கு எழுதப்படும் விமர்சனக் கட்டுரைகளில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கட்டுரை தேர்ந்தெடுக்கப்படும். அந்த ஒருவர் மட்டுமே பரிசு பெற தகுதியானவர்.
பரிசு விபரம்:
ஜெயமோகனை மையப்படுத்தி நடக்கும் விஷ்ணுபுரம் ஊட்டி இலக்கிய முகாமில் (மூன்றுநாள் முகாம்) சென்று கலந்துகொள்ள மூவருக்கு விமான டிக்கட்டுகள் பரிசாக வழங்கப்படும். ஊட்டி இலக்கியமுகாமில் இலவசமாகக் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். வெற்றியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மேலும் மூன்று நாட்கள் ஊட்டியில் தங்க விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஏற்பாடுகளைச் செய்யும். அந்தக் கூடுதலான மூன்று நாட்களை வெற்றியாளர்கள் தங்கள் சொந்த சுற்றுலா தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
போட்டி விதிமுறைகள்:
- பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கும் மேம்பட்ட விமர்சனக் கட்டுரைகளை (மூன்று பிரிவுகளில்) எழுதலாம். ஆனால் ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.
- பட்டியலில் உள்ள நூல்களில் தாங்கள் விரும்பும் நூலை/ நூல்களை முழுமையாக வாசித்து வாசகர்கள் தங்கள் புரிதலுக்கேற்ப விமர்சனக்கட்டுரைகளை எழுதலாம்.
- விமர்சனக்கட்டுரைகளுக்கு பக்க அளவு இல்லை.
- கட்டுரைகள் unifont எழுத்துருக்களில் கணினியில் எழுதப்பட்டிருக்கவேண்டும்
- பரிசுகளைப் பணமாக மாற்றமுடியாது.
- வெற்றியாளரைப் பிரதிநிதித்து மற்றவர்கள் பரிசு டிக்கெட்டைப் பயன்படுத்த முடியாது.
- வெற்றியாளருடன் நண்பர்களோ குடும்ப உறுப்பினர்களோ உடன் செல்லலாம். ஆனால் அதற்கான முழுசெலவையும் அவர்களே ஏற்க வேண்டும்.
- வெற்றியாளர்கள் மூன்றுநாட்களும் ஊட்டி இலக்கிய முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். முகாமில் தங்கும் வசதியும் உணவு வசதியும் செய்துத் தரப்படும். இதற்காக எந்தக் கட்டணமும் வாங்கப்படாது.
- முகாமிற்கு பிறகு மூன்று நாட்கள் சுற்றுப்பயண ஏற்பாடுகளைச் செய்வது வெற்றியாளர்களின் பொறுப்பு. உங்களுக்கான கூடுதல் மூன்று நாள் தங்கும் வசதிகள் மட்டும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் ஏற்பாடு செய்துத்தரப்படும்.
- சுற்றுலாவுக்கான செலவுகளைப் பங்கேற்பாளரே ஏற்க வேண்டும்.
- ஊட்டி இலக்கிய முகாம் மே மாதம் நடைபெறுவதால் விமான டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற முடியாது.
- விமர்சன கட்டுரைகள் 15.4.2019 குள் வல்லினம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
- தேர்வு பெரும் கட்டுரைகள் வல்லினம் அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.
- போட்டியில் வல்லினம் குழுவினர் பங்கெடுக்கக்கூடாது.
- மலேசியர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
1 comment for “விமர்சனக் கட்டுரை போட்டி”