அண்மையில் ஆனைமுத்து அவர்கள் மலேசியா வந்திருந்தார். மலேசிய தன்மான இயக்கமும் வல்லினமும் இணைந்து 19/1/2014 அன்று அவருடனான ஓர் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. கோலாலும்பூர், தான் ஶ்ரீ சோமாவில் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் வந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியைக் கொடுத்தது. மிகத் தெளிவாகப் பெரியார் குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும் பேசிய ஆனைமுத்து அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார்.