Tag: அக்கினி வளையங்கள்

அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை

1. மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்…

மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்

காலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி…

வளையங்களைத் தாண்டும் சுயநலம்

தான் கடந்து வந்தவர்கள் யாவரும் சுயநலமிக்கவர்களே, தானும் அப்படி இருப்பதில் தவறில்லை என்று சொந்த தராசில் சண்முகம்பிள்ளை எனும் கதாபாத்திரம் தன்னை நிறுத்தி நியாயப்படுத்தும் வகையில் இந்நாவல் முடிகிறது, அவர் பார்வையில் எல்லாருமே அக்கினி வளையத்தில் சாகசம் செய்யும் சுயநலமிக்க புலிகளாக நினைத்துக்கொள்கிறார். தானும் புலிதான் என அவர் எண்ணிக்கொள்ளும் நிலையில் ஒரு வாசகனாக அவ்வரியைக்…

வரலாறும் தனிமனிதனும்

‘எதிலும் சந்தேகப்படு‘ – கார்ல் மார்க்ஸின் இந்த‌ வாசகம்தான் ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் பரப்பை ஒரு நிலைப்படுத்தும் சூத்திரமாக அமைக்கிறது. இந்நாவலை ஆசிரியர் சை.பீர்முகம்மது அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மையமாக்கி அதனூடே மானுட கீழ்மைகளையும் ஊடாட விட்டுள்ளார். 23.02.1950   புக்கிட் கெப்போங்கில் (ஜொகூர்)   போலிஸ்நிலையத்தில் கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் வழி அக்கினி வளையங்கள் உக்கிரமாக எரியத் …