
சிங்கப்பூரில் தமிழில் தொடர்ந்து அசராது எழுதுவதற்கான உயிராற்றலைக் கண்டடைந்துள்ள மிகச் சிலரில் சிவானந்தம் நீலகண்டமும் ஒருவர். எழுதப்படும் படைப்புகளை ஒட்டி விரிவான உரையாடல்கள் வாசக சூழலில் எழாவிட்டாலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வாரம் தவறாமல் எழுதி வருபவர். சிங்கப்பூருக்கு அப்பாலும் பரந்த தமிழ் எழுத்துலகில் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்கள் சிராங்கூன் டைம்ஸ்…