
தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள்…