சில ஆண்டுகளுக்கு முன் இதே ஜொகூர் மாநிலத்தில் நடந்த மலேசிய – சிங்கப்பூர் இலக்கிய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதில் வல்லினம் வழி நாங்கள் உருவாக்க விரும்பும் இலக்கியப்போக்கு என்ன என்பதாக என் தலைப்பு இருந்தது. ஏறக்குறைய மலேசியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், ஒரு சில கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வளர்கள், எழுத்தாளர்கள் கூடியிருந்த மாநாடு அது. என்னுடைய அமர்வு இரண்டாவது நாள். இரண்டாவது நாள் சிறப்பு வருகை புரியவிருந்த தொழிலதிபருக்கு ஏற்பாட்டுக்குழுவினர் காத்திருந்தனர். எனவே அன்று முதலில் பேசவிருந்த மொழியியலாளர் திருமாவளவன் அவர்களின் உரை தாமதப்பட்டது. தனவந்தர் வந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. ஆனால் திருமாவளனுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைக்கப்பட்டது. எனது முறை வந்தபிறகு நான் உரையை இவ்வாறு தொடங்கினேன்.