எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது நான்கு கால்களையும் மொத்தமாய் திருப்பி மறுபுறம் சீறும் கணம் குபுக்கென பார்வையாளர்களுக்குத் தூக்கிப்போடும். மேலிருந்து கீழாக அதன் சாகசத்தைப் பார்க்கும் கண்களுக்கு அதன் துள்ளல்கள் பழகப் பழக அத்தனையும் ஓர் ஒழுங்கில் நிகழ்வதாகத் தோன்றும். நுண்வெளி கிரகணங்களை வாசித்து முடித்தபோதும் அந்நாவல் சு.வேணுகோபாலின் கட்டற்ற துள்ளல்கள் உருவாக்கிக்கொண்ட ஒழுங்கு என்றே மனதில் முதலில் தோன்றியது.
Continue reading