வாசிக்கும் முன்பு: இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த வசைகள் உதவலாம்.
ஒரு பத்திரிகையாளராக, ஊடகவியலாளராக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறெந்த வகையிலும் அவரை அடையாளப்படுத்த முடியவில்லை. சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சில குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியுள்ளார். அவ்வகையில் மாலன் போல பல இலக்கியவாதிகள் மலேசியாவிலும் தமிழகத்திலும் ஏராளமே உண்டு. ஆனால், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் அவர்தான் அடிக்கடி ஏதாவது ஒரு போட்டிக்கு நடுவராக வருகிறார். இப்படி அடிக்கடி பயணம் செய்வதற்காக அவர் இங்குள்ள அமைப்புகளுடன் நல்ல நெருக்கம் காட்டுகிறார். மற்றபடி அவரிடம் ஒரு நல்ல இலக்கியக் கட்டுரையாவது வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அண்மையில் அவர் எழுதிய ‘இலக்கியம் – சில அடிப்படைகள்’ என்ற கட்டுரை அந்தச் சந்தேகத்தை வலுவாக்குவதாய் உள்ளது. மாலன் போன்றவர்கள்தான் இந்த இடைவெளியை நிறைக்கிறார்கள். மொண்ணையான பிரதியையும் வாயாரப் பாராட்டுகிறார்கள். ஊக்குவிப்பதாகக் கூறி பொய்யான நம்பிக்கைகளை ஏற்படுத்துகிறார்கள். பல ஆண்டுகள் இலக்கிய உலகில் தன்னைத் திணித்துக் கொண்டிருப்பதாலும் ஊடகங்களின் பலத்தால் எழுத்தாளர்களின் நெருக்கத்தைப் பெற்றிருப்பதாலும் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளில் இருப்பதால் சில செயல்பாட்டுத் திட்டங்களை உருவாக்க முடிவதாலும் இதுபோன்றவர்களுக்கு ஒரு நகலான பிம்பம் உருவாகிறது. அந்தப் பிம்பம் உருவாக எழுத்தல்லாத பிற கூறுகள் காரணமாக இருந்தாலும் அவற்றைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல் இல்லாத எழுத்தாளர்கள் அவர் போன்றவர்களின் குரலுக்கு மதிப்பளிக்கின்றனர். உண்மையில் இதுபோன்றவர்களால்தான் மலேசிய – சிங்கை இலக்கியம் கீழிறங்கிச் செல்கிறது. அந்தத் தேசத்தில் ஒரு விமர்சன மரபை உருவாக்க நினைப்பவர்களை இவர்கள் தங்கள் போலியான பிம்பத்தால் தடுத்து நிறுத்த முயல்கின்றனர்.
உண்மையினை சொல்லுகிற பதிவு.. நகைச்சுவை ததும்பும் பாணியில்.. சிறப்பு.
கசப்பது உண்மை. அதனை நோயாளிகளுக்குத் தந்துள்ளீர்.
கருதுவதை உரிமையோடு உறக்கச்சொல்லும் வீரியம், வியக்கச் செய்கிறது.
பதிலுக்கு எதிர்முனையிலிருந்து எது வந்தாலும் நிர்வாகிக்க உகர்ந்த ஆற்றல் அற்றவர்கள் இவ்வாறு கர்ஜிக்க சாத்தியமே இல்லை. கடுமையாக கற்பிக்கிறீர்கள். நன்றி நண்பரே!
சாய்வற்ற பதிவு!