வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

20200831_215809இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது.

கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது எழுத்து முயற்சியைத் தொடங்கினார். பின்னர் வல்லினம் இதழில் கட்டுரைகள் எழுத முனைப்புக்காட்டினார்.

அபிராமி கணேசன் தனது கட்டுரைகள் வழி அடையாளம் காணப்பட்டார். சூழலியல் தொடர்பான அவரது விரிவான கட்டுரைகளும் மலேசியச் சமூகச் சூழல் குறித்த ஆய்வு கட்டுரைகளும் அவரைத் தனித்து அடையாளம் காட்டின. எழுந்து வரும் புதிய எழுத்தாளர் ஒருவர் கொடுக்கும் தொடர் உழைப்பும் கண்டடையும் புதிய தளங்களும் அவர் நம்பிக்கைக்குறிய கட்டுரையாளராக அடையாளம் காட்டுகிறது.
வல்லினம் இவ்வருடத்துக்கான இளம் எழுத்தாளர் விருதை கட்டுரை பிரிவுக்கானதாக முடிவெடுத்துள்ளது. விருது தொகையாக ரொக்கம் இரண்டாயிரம் ரிங்கிட்டுடன் (RM 2000) விருது கோப்பையும் வழங்கப்படும். வரும் காலங்களில் இளம் எழுத்தாளர்களின் பிற இலக்கிய முயற்சிகளும்  விருதுக்கு பரிசீலிக்கப்படும்.. இவ்வாண்டுக்கான விருதை தொடர்ந்து கட்டுரைகளில் கவனம் செலுத்திவரும்  பட்சத்தில்  தகுதி கொண்ட படைப்பாளராக அபிராமி கணேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது இனி வரும் இளம் படைப்பாளர்கள் பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என நம்புகிறோம்.

6 கருத்துகள் for “வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

 1. Bharathi Devi
  September 1, 2020 at 12:26 pm

  எழுத்தாளர் அபிராமி கணேசன் அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

 2. அ.ஜோன் போஸ்கோ
  September 1, 2020 at 1:49 pm

  சிறப்பு…..வாழ்த்துகள்

 3. Thennarasu
  September 1, 2020 at 6:32 pm

  ஆக்கம் தரும் முயற்சி இது..அபிராமிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்

 4. ganesan
  September 2, 2020 at 9:20 pm

  அபிராமி… இந்த விருது உங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. வாழ்த்துகள்

 5. வாசன்
  September 2, 2020 at 9:21 pm

  எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் அபிராமி. இனிதான் உங்கள் படைப்புகளை வாசிக்கப்போகிறேன். வல்லினம் விருது வழங்கினால் காரணம் இல்லாமலா இருக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...