(முனைவர் கிங்ஸ்டன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) வாழ்க்கையில் சிலரை நாம் சந்திக்கும் தருணங்கள் நொடிப்பொழுதில் நடந்துவிடக்கூடியவை. எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகள் நமது வாழ்க்கைக்குச் செறிவான பாதை அமைக்குமென்றால் அவற்றைத் தரிசனங்கள் என்றே குறிப்பிடுதல் தகும். மலேசியத் தமிழ் நாட்டுப்புறவியல் ஆராயும் நோக்கத்தோடு…
Author: திலிப் குமார் அகிலன்
ஆவணப்படம்: சை.பீர்முகம்மதுவின் இலக்கியப் பங்களிப்பு
மலேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை ஊடாடிப் பார்க்கையில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பு அதற்கு அச்சாணியாக இருந்ததை அறியமுடிகிறது. மொழியை முதலில் நேசிக்க ஆரம்பித்த அவர்களின் ஆளுமையின் முதல்படி பின்னர் விரிந்து தழைத்துப் பலர் போற்றும் இலக்கிய படைப்புகளைப் பிரசவித்துள்ளது. அவ்வாறான இலக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் அறிந்து கொள்வது இலக்கியச் சூழலில்…
அறிந்த வரலாற்றில் அறியப்படாத இடைவெளி
மலேசிய இலக்கிய வரலாற்றின் வழித்தடத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மா.இராமையா, ரெ.கார்த்திகேசு, வா.முனியன், சை.பீர்முகம்மது, முனைவர் கிருஷ்ணன், முனைவர் சபாபதி, பாலபாஸ்கரன் என பல்வேறு தரப்பினர் எழுதியுள்ளனர். இது அவர்களுக்கு அந்தந்த காலக்கட்டத்தில் கிடைத்த தரவுகள், ஆவணங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்குறிப்புகள் எனலாம். இத்தகவல்களை அவர்கள் முந்தைய ஆய்வாளர்களிடமிருந்தும் அச்சு ஊடகங்களிடமிருந்தும் எடுத்து தொகுத்திருப்பதோடு,…
அவிழாத மொட்டுகள்
உங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா? இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள்…
ரப்பியா கயிறு
யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. வாளியில் தண்ணீர் மொண்டு ஒரு தடவை ஊற்றிவிட்டு, விளக்கமாறைக் கடைசியாய் இரண்டு தடவை தரையில் அடித்து நீரை வழித்து விட்டு செல்வி நிமிரவும், அவர்கள் வரவும் சரியாயிருந்தது. “சுடுகாட்டுக்குப் போனவங்க வந்துட்டாங்க”, தெண்டிற்குக் கீழ் அமர்ந்திருந்த சுப்பையாதான் சட்டென எழுந்து தகவல் சொன்னார்.…