Author: கருணாகரன்

நகர்ந்து கொண்டேயிருக்கும் உயிருள்ள கோள்

லதாவின் ‘யாருக்கும் இல்லாத பாலை’ யின் கவிதைகளை ‘பொருள் மயக்கின் அழகியல்  (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான். கூடவே, ‘நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகள்’ எனச் சொல்லும் அவர், இதைக் கண்டடைந்ததற்கான வழித்தடங்களையும் இந்தத் தொகுதிக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார். லதாவின் உணர்தல் தீவிர நிலை, சாதாரண நிலை, அதி தீவிர நிலை…

பெருமிதம், தாழ்வுணர்வு மற்றும் சில தடுமாற்றங்கள்

01) மலேசியாவிலிருந்து ‘வல்லினம்’ இலக்கியச் செயற்பாட்டியக்கத்தைச் சேர்ந்த குழுவினர் 2018 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களுடைய வருகையின் நோக்கம் மலேசிய இலக்கியம் பற்றிய அறிமுகத்தையும் அதையொட்டிய பரஸ்பர இலக்கிய உரையாடல்கள், அறிமுகங்களையும் நிகழ்த்துவது. இதை வல்லினம் இதழின் ஆசிரியர் ம. நவீன் தன்னுடைய பதிவில் கீழ்வருமாறு தெளிவாக விளக்கியுள்ளார். “‘வல்லினம் 100’ களஞ்சியத்தை…

இலங்கையின் தமிழ் இலக்கியம்

இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது…

கருணாகரன் கவிதைகள்

நம் வீதியில் ஆயிற்று இன்னொரு காலம் என்ற போதும் நாம் உணரவில்லை இன்னோர் காலம் இதுவென்று குருதியில்லை, குண்டுச் சத்தங்கள் இல்லை அகதி இடப்பெயர்வுகளும் இல்லை என்றாலும் யுத்தம் ஒயவில்லை இன்னும் குண்டும் குருதியும் தீயும் புகையும் காயமும் இன்றிய யுத்தம் போரின் பிறிதொரு ரூபமே. நான் தோற்கடிக்கப்படும் கணந்தோறும் நிகழ்வது யுத்தமன்றி வேறென்ன? என்னுடைய…

தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.

தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து…

மெழுகாய்க் கனிந்த ஆஸ்பத்திரியில் புன்னகையைத் தவறவிட்ட பெண்

மெழுகாய் உருகிக் கொண்டிருந்த ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன் இருபத்தி நான்காம் அறை நாற்பத்தி ஏழாம் இலக்கக் கட்டில். புன்னகையை வழியிலெங்கோ தவற விட்ட பெண் அங்குமிங்கும் நடக்கிறாள் தடுமாறிக்கொண்டு. மருத்துவத் தாதி என்பது சிகிச்சைக்கும் ஆதரவுக்கும் இடையில் கனிந்த மலர் என்பதுவா உதிர்ந்த மலர் என்பதுவா என்றறிய விரும்பிய மனதில் கத்திகளும் காயங்களும் மாறி மாறி விழுகின்றன.…

கடற்கரையில் நான் நின்ற பின்னேரம்

ஒரு பின்னேரம் பாழடைந்து போனதைக் கண்டு தலைகுத்தி விழுந்தேன் கண்ணீருக்குள். என்ன வஞ்சமென்று தெரியவில்லை ஒரு காக்கையுமில்லை அந்த மாலையில் கரைந்து கரைந்து அதை மெருகேற்ற கடல் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் தளம்பிக் கொண்டிருந்தது என்முன்னால். என் முகம் பார்க்கத் திராணியற்று வெம்பியது அது. கதறிக் கதறி அழவேண்டும் போலிருந்தது எனக்கு. அது பின்னேரமாக…