
“துர்க்கனவுகளைப் பேய்கள் திங்கட்டும்,” என்று சொன்னார் அவர். முதலில் அவர் தனக்குத்தானே பேசிக் கொள்கிறார் என்று தோன்றியது. சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பிப் புன்னகைத்தார். அது என்னிடம் சொல்லப்பட்டதுதான் என்று உணர்ந்து, கொஞ்சம் தயங்கி பதிலுக்குப் புன்னகைத்தேன். இரைச்சலான ஜாஸ் இசை அதிர்ந்து கொண்டிருந்தது. விதவிதமான மது வகைகள் தொடர்ந்து கலக்கப்பட்டு பல வண்ணங்களில் மதுக்கோப்பைகள்…