“இரு கொட்டகைக்கிடையில் எப்போதும் போல தேங்கி நிற்கும் பாசியேறிய நீரில் தவளைக்கண்கள் முளைத்திருக்கும். அவை தலைப்பிரட்டைகளாய் அவ்வப்போது வெள்ள மிகுதியில் கொட்டைகையோரம் மண் திட்டாய் உயர்த்தப்பட்ட கரையோரம் உலவித் திரியும் போது பார்த்திருக்கிறேன். இப்போது பெரிய மழை பெய்து நாளானதில் மடுவுக்குள் சுருங்கிக் கொண்ட நீண்ட கால்களைக் கொண்டு பறக்கும் தவளைகளைக் கொஞ்சமாக உற்றுப் பார்த்தபடி…
Author: சப்னாஸ் ஹாசிம்
பந்தல்
கிணற்றடியிலிருந்து துலா ஏறி ஏறி இறங்கும் வாளிச்சத்தம் தூரத்திலும் கேட்கும் படி அன்றைக்கு பாக்குமரங்கள் சலசலப்பின்றி திமிறி நின்றன. பழைய துலா மரத்தண்டின் மேல் சுற்றி நிற்கும் பெரிய வெற்றிலைகளை குளித்துத் தெறித்த தண்ணீர் துளிகள் ஒட்டி ஒட்டி தளும்பும் இலைகளின் ஆட்டம் ஆவர்த்தனமாயிருக்கும். எனது இறந்த சைக்கிள்களை அளவில் சிறியதிலிருந்து வரிசையாக உள் சுவரில்…
சிருஷ்டியுலகம்
மெல்லிய பூஞ்சை வெயில் படர்ந்திருந்த முறாவோடையின் நீர்ப்பரப்பிலிருந்து பொட்டுப் பூச்சிகள் தாவித் தாவி ஓடும் நீரதிர்வுகளை, வண்டுகளின் இறக்கை பட்டு இலை மூடிய தொட்டாச்சுருங்கி பூக்களை, மாடு முறித்த எருக்கிலைச் செடியிலிருந்து சொட்டும் பாலை ஆயிஷா பார்த்தபடி இருந்தாள். இருளாகும் சமிக்ஞை போல அலங்கார தெருவிளக்கின் கண்ணாடி மூடிச்சிமிழிலிருந்து மூஞ்சூறு போல வெளிச்சங்கள் இடைவெளி விட்டு…
காவல்காரன்
ஜன்னலில்லாத மேல் அறையின் விரிப்பு மெத்தையில் அவன் படுத்த முதுகுப்புற இடவின் வியர்வைக்கோடு அழுந்தியிருந்தது. அழுக்காயிருந்த தலையணை உறையில் முகம் புதைத்தபடி இருந்தான். ஏதோ கருகி மணக்கும் வாசனை கும்மென்று அடைத்த போது இதற்கு முன்னர் தெருவில் யாரோ கொதிக்கும் என்ஜின் எண்ணெய்யை ஊற்றிய நாய் துடிதுடித்த போது பொசுங்கிய மயிர்த்தோலின் வாசனை அவனுக்கு நினைவுக்கு…