Author: பிரபு. ஆ. (முனைவர்)

‘உணவும் பண்பாட்டு மெருகேற்றலும்’

முன்னுரை மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலிடம் வகிப்பது உணவு. மனித நாகரிகம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்த சூழலில் உணவுப் பண்பாடும் ஓசையின்றி உடன் வளர்ந்ததை மானிடவியல் ஆய்வுமுடிவுகளின் வாயிலாக அறிகின்றோம். தமிழர்களது முற்கால வரலாற்றை ஆராயும்போது, உணவு உள்ளிட்ட அடிப்படைக்காரணிகள் குறித்தும் உடன் விவரிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு உணவிற்கான இருப்பு மனித வரலாற்றில் நீக்கமற…

இனவரைவியல் நோக்கில் சிறுமலைப் பளியர்

இந்தியாவில் காணப்படும் பல்வேறு இனக்குழுக்களில், பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவுதான். தனித்த அடையாளங்களும், மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் குணமும் இப்பழங்குடியின மக்களுக்குண்டு. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும்பகுதி நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும், அண்மைக்காலம்வரை இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கல்விகற்றவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற…

பத்தினிக் கோட்டம் (சில தடங்களும் தொன்மங்களும்)

பள்ளிப் பருவத்தினின்றே தமிழ்ப்பாடம் என்றால் அலாதிப் பிரியம்தான் எனக்கு. அதிலும் சிலப்பதிகாரம் குறித்த ஆர்வம் எனக்குள் அதிகரித்தது கல்லூரிப்பருவத்தில் தான். அதற்குக் காரணம், சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் எங்கள் பகுதிக்கும் உள்ள தொடர்பைக் கேள்விப்பட்டதுதான்.  மேலும், பேராசிரியர் சி.கோவிந்தராசனார்  எழுதிய ‘கண்ணகி அடிச்சுவட்டில்’ என்ற நூலும், கண்ணகிக்கோட்டம் கண்டறியப்பட்டபோது அங்கு மண்டிக்கிடந்த புதர்களை அகற்றும் குழுவில் வேலைக்குச்…

மகள் மறுத்தல்

‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப பூர்வீகத் தமிழ்க்குடிகள் தன்மான உணர்வுடன் கோலோச்சி வாழ்ந்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான். பொதுவாகச் சங்க இலக்கியங்களை நோக்குங்கால், சீறூர் மன்னர் பெருவேந்தர் என இரண்டு ஆளுமைகள் மக்களை வழிநடத்தியதைக் காண்கின்றோம். இவ்விரு ஆளுமைகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் இருப்பதும் அவரவர் செயல்களைக் கொண்டு அறியமுடிகின்றது.…

சங்ககாலப் பண்பாடு – ‘பாதீடு’

தான் ஒருவனுக்கே என்றல்லாமல் பிறரோடு பகிர்ந்து வாழும் உயர்ந்த பொதுவுடைமைச் சிந்தனைக்கு வேராக இருந்தது தொல்தமிழர் வாழ்ந்த சங்ககாலம் என்றால் அது மிகையாகது. குறிப்பாக இனக்குழு அடையாளங்களோடு வாழ்ந்த திணைசார் அடித்தட்டு மக்களிடம் பங்கிட்டு உண்ணும் வழக்கமும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த வாழ்வியலும் காணப்பட்டன. இனக்குழுச் சமூகப் பண்புகளுள் பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது மரபான…