நிரை: மலேசியச் சிறுகதைகளின் முகம்

நிரை: மலேசியச் சிறுகதைகளின் முகம்

மலேசியாவில் எழுதப்பட்ட தமிழ்ச்சிறுகதைகளில் தரமானவற்றைத் தொகுக்கும் முயற்சியில் நிரை தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தை மேலும் விரிவாக்க வாசகர்களின் உதவி தேவை.

அ. நீங்கள் வாசித்த தரமான மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளை எங்களுக்குப் பரிந்துரைக்கலாம். அக்கதை வாசிக்கப்பட்டு தளத்தில் இணைக்க ஆசிரியர் குழுவால் முடிவு செய்யப்படும்.

ஆ. உங்கள் ஊரில் உள்ள இலக்கியக் குழுவில் நிரை தளத்தில் உள்ள சிறுகதைகள் குறித்து உரையாடலாம். அதன்வழியாக இதில் உள்ள சிறுகதைகளை பரவலான வாசிப்புக்குக் கடத்தலாம்.

இ. உங்கள் வாசிப்பில் தரமற்ற சிறுகதை இத்தளத்தில் இணைக்கப்பட்டதாகக் கருதினால் அது குறித்த விமர்சனத்தையும் முன் வைக்கலாம்.

இது, மலேசியாவின் தரமான தமிழ்ச் சிறுகதைகளைச் சேகரித்துப் பொது வாசிப்புக்கு எடுத்துச்செல்லும் முயற்சி. எனவே வாசகர்கள், எழுத்தாளர்கள் இதில் உள்ள சிறுகதைகளை வாசித்து, அது குறித்த கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்வதே இம்முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அனைத்துத் தொடர்புகளுக்கும்: valllinamm@gmail.com

நிரை தளம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...